23
Wednesday
April, 2025

A News 365Times Venture

Palm Sunday: டெல்லியில் ஈஸ்டர் குருத்தோலை ஊர்வலத்திற்குத் தடை; பாஜக அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

Date:

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையின்போதுதான் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கடந்த 15 ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில் நகரத்தின் மையத்தில் அமைத்திருக்கும் செயின்ட் மேரிஸ் கத்தோலிக் சர்ச்சில் இருந்து சேக்ரட் ஹார்ட் தேவலாயம் வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு குருத்தோலை ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குருத்தோலை ஊர்வலத்திற்கு தடை விதித்திருந்தது டெல்லி காவல்துறை.

குருத்தோலை ஊர்வலம்

டெல்லியின் பிரதான சாலை வழியே இந்த ஊர்வலம் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் காவல்துறை இதற்கு தடை விதித்திருக்கிறது.

ஆனால் அங்கிருக்கும் கத்தோலிக்க சங்கத்தினர், ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணி முதல் 6.30 மணி வரை போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு ஏதுமின்றியே அமைதியான முறையில் நடத்தப்பட்டு வரும் ஊர்வலத்திற்கு காவல்துறை தடைவிதித்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் விவாதப்பொருளாகி, குருத்தோலை ஊர்வலம் தடை என்பது சிறுபான்மை மத உரிமைகள் மற்றும் இந்தியச் சட்டத்திற்கு எதிரானது என்றும் சிறுபான்மையினர் மீதான பண்பாட்டுத் தாக்குதல் என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (CPIM), “டில்லியில் குருத்தோலை ஊர்வலத்திற்கு தடை… ஏப்ரல் 4 வக்பு சட்டம். ஏப்ரல் 13 டெல்லி புனித இருதய கதீட்ரல் நோக்கிய குருத்தோலை ஊர்வலத்திற்கு தடை. 15 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த ஈஸ்டர் குருத்தோலை ஊர்வலம் இப்போது பாதுகாப்பு காரணங்களால் தடை. மோடி அரசு சிறுபான்மை மத உரிமைகள் மீது வாரம் ஒரு தாக்குதல்.” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கிறிஸ்தவர்களின் நாற்பது நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது குருத்தோலை ஞாயிறு. கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் என்னும் பைபிளில் சொல்லப்பட்டபடி, இயேசுகிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் எருசலேம் நகருக்குள் நுழைந்தாராம்.

குருத்தோலை ஊர்வலம்

அப்போது, இயேசு ஒரு கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இயேசுகிறிஸ்து மனித குலத்துக்குத் தாழ்மையைக் கற்றுத் தருவதற்காக எருசலேம் நகரில் கழுதையின்மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையிலேயே இந்தக் குருத்தோலை பவனி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்..! #PalmSunday

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசரா



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಏ.24 ರಂದು ಮಹದೇಶ್ವರ ಬೆಟ್ಟದಲ್ಲಿ ಕ್ಯಾಬಿನೆಟ್ ಮೀಟಿಂಗ್ ಗೆ ಭರದ ಸಿದ್ದತೆ: ಭದ್ರತೆಗೆ 2ಸಾವಿರ ಪೊಲೀಸರ ನಿಯೋಜನೆ

ಚಾಮರಾಜನಗರ,ಏಪ್ರಿಲ್,22,2025 (www.justkannada.in): ಏಪ್ರಿಲ್ 24 ರಂದು ಚಾಮರಾಜನಗರ ಜಿಲ್ಲೆ ಹನೂರು...

പഹൽഗാമിൽ ആക്രമണം നടത്തിയ തീവ്രവാദികളുടെ ചിത്രം പുറത്തുവിട്ട് അന്വേഷണ സംഘം

ശ്രീനഗർ: ജമ്മു കശ്മീരിലെ പഹൽഗാമിൽ 28 പേരുടെ ജീവനെടുത്ത ആക്രമണം നടത്തിയ...

Pahalgam Attack: “எங்களுக்கு தொடர்பில்லை, இந்திய அரசுதான் காரணம்..'' – பாகிஸ்தான் அமைச்சர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் (Pahalgam Attack) நடந்த தாக்குதலுக்கு பின்னால்...

Meenakshi Natarajan: కాంగ్రెస్ పార్టీ సిద్ధాంత ప్రచారం.. గ్రామస్థాయి నుంచే జరగాలి..

Meenakshi Natarajan: హైదరాబాద్ లో పరిశీలకుల సమావేశం ముగిసింది. జిల్లాకు ఇద్దరు...