அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம், கம்பியூட்டர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் சில எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு பரஸ்பர வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
அமெரிக்க மக்கள் அதிகமாக வாங்கிக்குவிக்கும் இந்த பொருள்களின் விலையேற்றம் பெரும் சுமையாக அமைவதைத் தடுக்கும் வகையில் இந்த வரிகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தண்டனையளிக்கும் விதமாக கொண்டுவந்த பரஸ்பர வரிவிகிதங்கள் 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள போதிலும் 10% அடிப்டை வரிவிகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரிவிகிதங்களுக்கு எதிராக சீனா கூடுதல் வரி விதித்ததால், சீன இறக்குமதிகள் மீது அதிகபட்சமாக 145% வரி விதித்தது அமெரிக்கா.
ஆனால், இப்போது அறிவித்துள்ள விலக்கினால் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு 145% வரி பொருந்தாது.
செமிகண்டக்டர்கள் அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளின் மீதான 10% அடிப்படை வரியிலிருந்தும் சீனாவின் மீதான 125% கூடுதல் வரியிலிருந்தும் விலக்கு பெற்றுள்ளன.
இந்த விலக்குகள் ட்ரம்ப் அறிவித்துள்ள வரிகளின் பாதிப்பைக் குறைக்கின்றன.

ட்ரம்ப் நிர்வாகம் சீனாவின் மீது போட்டுள்ள தண்டனையளிக்கும் வகையிலான வரி விகிதத்தால், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிகபட்சமாக 245% வரை வரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் தயாரிக்கப்படாத பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுவருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ட்ரம்ப் இந்த அதிகப்படியான வரி விகிதங்கள் மூலம், மீண்டும் அமெரிக்காவில் பொருள்களின் உற்பத்தியைத் தொடங்க முடியும் என நினைக்கிறார். ஆனால், அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
