30
Wednesday
April, 2025

A News 365Times Venture

`ஆர்.காமராஜ் ஏரியாவில் விஜயபாஸ்கர் பாலிடிக்ஸ்?’ – தஞ்சாவூரில் கவனம் பெற்ற பிறந்தநாள் விழா

Date:

அதிமுக முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் பிறந்தநாள் விழா இன்று அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் அதிமுகவை சேர்ந்த சிலர் அவரது பிறந்த நாளை கொண்டாடியது உள்ளூரில் பேசு பொருளாகியிருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணிக்கு சென்ற பிறகு, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை பொறுப்பாளராக இருந்து கவனித்து வரும் ஆர்.காமராஜ் தரப்புக்கு இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

`சோழமண்டல தளபதி’

இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் சிலரிடம் பேசினோம், ஜெயலலிதா இருந்தவரை டெல்டா அதிமுகவின் முகமாக இருந்தவர் வைத்திலிங்கம். இவரை `சோழமண்டல தளபதி’ என்றே அதிமுகவினர் அழைத்தனர். இந்த நிலையில் வைத்திலிங்கம், ஓபிஎஸ் அணிக்கு சென்ற பிறகு ஆர்.காமராஜை `சோழமண்டல தளபதி’ என அழைக்கத் தொடங்கினர் தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

ஆர்.காமராஜ்

வைத்திலிங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட பலரும் ஆர்.காமராஜை ஆதரித்து முன்னிலைப்படுத்தினர். ஆர்ப்பாட்டம், கட்சி சார்ந்த ஆலோசனை கூட்டம் என ஆர்.காமராஜை அழைத்து நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு பொறுப்பானவராக ஆர்.காமராஜை எடப்பாடி பழனிசாமி முன்னிலைப்படுத்தினார்.

இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஆர்.காமராஜ் தொடர்பான இடங்களில் ரெய்டு நடைபெற்ற பிறகு ஆர்.காமராஜ் கட்சி பணிகளில் சுணக்கம் காட்ட ஆரம்பித்தார் என்கிறது கட்சியின் ஒரு தரப்பு. கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தன் பொறுப்பு மாவட்டமான தஞ்சாவூர் தொகுதியை தேமுதிக-வுக்கு கிடைக்க காரணமானார். இதனால் உள்ளூரில் பலரும் அவர் மீது அப்செட் ஆனார்கள்.

இந்த நிலையில் டெல்டா அதிமுகவில் ஏகப்பட்ட கோஷ்டி பூசல்கள் உருவாகின. எடப்பாடி பழனிசாமியால் பதவியில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்து, அவரிடமே பல நிர்வாகிகள் புகார் சொல்லி வந்தனர். இதன் பின்னணியில் ஆர்.காமராஜ் இருப்பதாகவும் பேசப்பட்டது. ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் எடப்பாடி பழனிசாமியிடம் செல்வது வாடிக்கையானது. இவற்றை சமாதானப்படுத்தாமலும், கண்டும் காணாமலும் இருந்து வந்தாராம் ஆர்.காமராஜ்.

இந்த நிலையில் வைத்திலிங்கம் கட்சியில் பவர்ஃபுல்லாக இருக்கும் போதே அவர் இடைத்த பிடிக்க ஆர்வம் காட்டினாராம் விஜயபாஸ்கர்.

எடப்பாடி பழனிசாமி, ஆர்.காமராஜ்

இந்த சூழலில் ஆர்.காமராஜ் சுணக்கமாக இருப்பதை விஜயபாஸ்கர் பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்காக நடைபெற்ற கபடி போட்டியில் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து முக்கியத்துவம் கொடுத்து மரியாதை செய்தார் விஜயபாஸ்கர். இது அப்போது பலராலும் முனு முனுக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜயபாஸ்கர் பிறந்த நாளுக்காக டெல்டா மாவட்டங்களில் ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதே போல் தஞ்சாவூரில் சில அதிமுகவினர் சேர்ந்து அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடியதும் அதிமுக வட்டத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. ஆர்.காமராஜ் மீது அதிமுக தலைமை வருத்தத்தில் இருக்கிறதாம். மற்ற மாவட்டங்களில் உள்ள முன்னாள் அமைச்சர்களை போல் அவர் செயல்படுவதில்லை என்ற குறை அவர் மீது உள்ளது.

டெல்டா திமுக-வுக்கு சாதகமான தொகுதிகளாக உள்ளன. வரும் சட்டமன்ற தேர்தலில் டெல்டாவில் குறிப்பிட்ட தொகுதிகளை தன் வசமாக்க நினைக்கிறது தலைமை. இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு விஜயபாஸ்கர் சரியாக இருப்பார் எனவும் கருதுகிறதாம். எனவே அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்லி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கு வாய்மொழியாக சொல்லப் பட்டுள்ளதாக பேசுகிறார்கள். அதனால் தான் விஜயபாஸ்கர் இங்குள்ள நிர்வாகிகளை நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். அவரது பிறந்தநாளை இங்கு கொண்டாடுகின்றனர். இதில் சர்ச்சை ஏற்படாமல் இருக்க ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக கொண்டாடப்பட்டதாக இதற்கு ஏற்பாடு செய்த அதிமுக-வினரால் சொல்லப்படுகிறது. இனி ஆர்.காமராஜ் எடுக்க போகும் மூவ் என்னவாகும் இருக்கும் என்பதே அதிமுக வட்டத்தில் எதிர்பார்ப்பாக உள்ளது’ என்றனர்.

ஆர்.காமராஜ்

ஆர்.காமராஜ் தரப்பை சேர்ந்தவர்களோ, “அமமுக உள்ளிட்ட மாறுக்கட்சியை சேர்ந்தவர்களை அதிமுக-வில் இணைய வைத்து வருகிறார் ஆர்.காமராஜ். கட்சியே என் முதல் குடும்பம் எனவும் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவரது இல்ல விழா ஒன்றில் எடப்பாடி பழனிசாமி குறித்து கண்கலங்க பேசியது எடப்பாடி மீது ஆர்.காமராஜ் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தியது. அடிக்கடி சேலத்துக்கு சென்று சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். இருவருக்குமான ஒரு புரிதல் நிலவும் நிலையில் ஆர்.காமராஜ் மீது எடப்பாடி மனகசப்பில் இருப்பதாக சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Off The Record: పటాన్‌చెరు కాంగ్రెస్‌లో ఆరని మంటలు.. పరిష్కారం కోసం ఇద్దరు సభ్యుల పార్టీ కమిటీ!

కాంగ్రెస్ పార్టీ అంటే అంతేనా? అక్కడ కమిటీలంటే కాలయాపన కోసమేనా..? ఓ...

ಐಪಿಎಸ್ ಅಧಿಕಾರಿಗೆ ಹೊಡೆಯೋಕೆ ಹೋಗೋದು ಶಾಂತಿನಾ? ಅವರನು ನಿಮ್ಮ ಮನೆ ಕಸ ಹೊಡೆಯೋರಾ? ಆರ್.ಅಶೋಕ್ ಕಿಡಿ

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,29,2025 (www.justkannada.in): ಕಾಂಗ್ರೆಸ್ ಸಮಾವೇಶದ ವೇಳೆ ಬಿಜೆಪಿ ಕಪ್ಪು ಪಟ್ಟಿ...

ഗുരുവായൂരമ്പലനടയില്‍ പോയല്‍ പുലിനഖമാല ധരിച്ച കുറേപ്പേരെ കാണാം; അവരൊക്കെ വന്യജീവി നിയമപ്രകാരം അനുമതി ലഭിച്ചവരാണോ? ഹരീഷ് വാസുദേവന്‍

കോഴിക്കോട്: റാപ്പര്‍ വേടനെതിരായ വനംവകുപ്പിന്റെ നടപടിയില്‍ പ്രതിഷേധക്കുറിപ്പുമായി അഭിഭാഷകന്‍ ഹരീഷ് വാസുദേവന്‍....