16
Wednesday
April, 2025

A News 365Times Venture

"இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்" – பிரதமர் மோடி

Date:

பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க முன்னிலையில் இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பிரதமர் மோடி – இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க

அதன் பிறகுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மோடி, “இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் நெருக்கமான உறவுகள் உள்ளன.

இலங்கை பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள மூன்று கோயில்களைச் சீரமைக்க இந்தியா உதவும்.

இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதனைத் தொடர்ந்து பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க, “இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இந்த மண்ணில் நடக்காது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது.

டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇംഗ്ലീഷ് മീഡിയം പാഠപുസ്തകങ്ങള്‍ക്ക് ഹിന്ദി തലക്കെട്ടുകള്‍ നല്‍കാനുള്ള എന്‍.സി.ഇ.ആര്‍.ടി യുടെ തീരുമാനം പിന്‍വലിക്കണം: വി.ശിവന്‍കുട്ടി

  തിരുവനന്തപുരം: ഇംഗ്ലീഷ് മീഡിയം പാഠപുസ്തകങ്ങള്‍ക്ക് ഹിന്ദി തലക്കെട്ടുകള്‍ നല്‍കാനുള്ള എന്‍.സി.ഇ.ആര്‍.ടി...

வக்பு : `தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமம்’ – உச்ச நீதிமன்ற விசாரணையில் நடப்பது என்ன?

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம்...

Good Bad Ugly: కొడుకు డైరెక్టర్ తండ్రి అసోసియేట్ డైరెక్టర్‌

అజిత్ హీరోగా, ఆధిక్ రవిచంద్రన్ దర్శకత్వంలో రూపొందిన ‘గుడ్ బ్యాడ్ అగ్లీ’...