8
Tuesday
April, 2025

A News 365Times Venture

WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையில் நிறைவேற்றம்

Date:

12 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு, நேற்று மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

‘இது முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் மசோதா’ என்ற குரல்கள் எழுந்தன.

இருந்தும், வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது என்றும், இந்த மசோதா மீது 8 மணி நேர‌ விவாதம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், நேற்றைய விவாதம் 12 மணிநேரத்திற்கு தொடர்ந்தது. எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளையும், எதிர்ப்புகளையும் முன் வைத்தனர்.

மக்களவை: 12 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு!

விவாதத்தின் இறுதியில் மசோதாவின் மீது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 288 – 232 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் அடிப்படையில், வக்ஃப் வாரிய நிலங்களை நடைமுறைப்படுத்த இரண்டு முஸ்லீம் அல்லாதவர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.

இந்த மசோதா மதத்தை பற்றியது அல்ல என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு விளக்கம் தந்து வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಬಿಜೆಪಿ ಮನೆಯೊಂದು ಮೂರು ಅಲ್ಲ, ನೂರು ಬಾಗಿಲು:  ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್ ಲೇವಡಿ

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,7,2025 (www.justkannada.in): ರಾಜ್ಯ ಕಾಂಗ್ರೆಸ್ ಸರ್ಕಾರದ ವಿರುದ್ದ ಜನಾಕ್ರೋಶ ಯಾತ್ರೆಗೆ...

കേന്ദ്രമന്ത്രി കിരണ്‍ റിജിജു ഏപ്രില്‍ 15ന് മുനമ്പത്ത്

കൊച്ചി: കേന്ദ്ര ന്യൂനപക്ഷ വകുപ്പ് മന്ത്രി കിരണ്‍ റിജിജു ഏപ്രില്‍ 15ന്...

`சீமான் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்!' – வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக...

Shiv Sena MP: “ప్రజల గుండెల్లో షిండేనే సీఎం”.. మహాయుతి కూటమిలో కొత్త వివాదం..

Shiv Sena MP: శివసేన ఎంపీ మానే చేసిన వ్యాఖ్యలు సంచలనంగా...