6
Sunday
April, 2025

A News 365Times Venture

Waqf Bill: "இஸ்லாமியர் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி" – நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேச்சு

Date:

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா, சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்ட விஷயங்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் கூறியவற்றுடன் பொருந்தவில்லை என்றும், இந்த மசோதா மத சுதந்திரத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது என்றும் பேசியுள்ளார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் ஆ.ராசா பேசியதாவது:

கதைகளை கட்டி விடுகிறீர்கள்

அமைச்சரின் (கிரண் ரிஜிஜு) தைரியமான பேச்சைக் கேட்டேன். அவருக்கு இது போன்ற துணிச்சலான பேச்சு எங்கிருந்து வந்தது என்று ஆச்சர்யப்பட்டேன். அனைத்துக் கதைகளையும் நாடாளுமன்றத்தில் சொல்வதற்கு எங்கிருந்து தைரியம் வந்தது.

A Raja

உங்கள் பேச்சையும் கூட்டுக் குழுவின் அறிக்கையையும் ஒப்பிட்டு இரண்டும் பொருந்துகிறதா என்பதை பாருங்கள் ராஜினாமா செய்துவிடுகிறேன்.

வக்ஃப் மசோதாவை தாக்கல் செய்யும்போது நீங்கள் சொன்ன ஒரு எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கைவிடப்பட்ட சொத்துகள் இருப்பதாக தெரிவித்தீர்கள்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு தமிழகத்துக்கு வந்து பார்த்தது. மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை செயலாளர் உரிய ஆவணங்களுடன் கூட்டுக்குழுத் தலைவரை சந்தித்து நீங்கள் கட்டிவிட்ட கதைகள் பொய் என நிரூபித்தார்கள்.

இப்படிப்பட்ட கதைகள் கட்டிவிட்ட நீங்கள் தற்போது நாடாளுமன்றக் கட்டடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டது என்று புதிய கதையை கூறுகிறீர்கள். இதில் என்ன முரண் என்றால் சிறுபான்மையினரை பாதுகாப்பதாக கூறும் கட்சியில் சிறுபான்மையினரை சேர்ந்த எம்.பி-க்களே இல்லை.

இன்று நாடாளுமன்றத்துக்கு மிக முக்கியமான நாள்

ஆனால் மதச்சார்பின்மை பற்றி நமக்கு அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். நாட்டின் தலையெழுத்தை முடிவு செய்யும் முக்கியமான நாள் இன்று. நமது சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னோடிகள் வகுத்த பாதையில் செல்லப் போகிறதா? அல்லது நாட்டை ஆளும் மதவாதிகளின் பாதையில் செல்லப்போகிறதா?

தமிழ்நாடு வக்ஃப் வாரியம்

வக்ஃபு மசோதா குறித்து முழுமையான உண்மைகளை ஒன்றிய பாஜக அரசு கூறவில்லை. நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்ஃப் மசோதாவில் பிரதிபலிக்கவில்லை. 

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருக்கிறது. அதில் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை. முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே எங்கள் நிலைபாடு. இது தொடர்பாக தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

சொத்துகளை அபகரிக்கும் முயற்சி

நாட்டின் இறையான்மை என்பது இந்த அவையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். புதிய சட்டத்திருத்தம் வக்ஃப் சொத்துகளை அரசு அபகரிக்கும் அதிகாரம் வழங்குகிறது. சொத்துகளை கணக்கெடுப்பதற்கான ஆய்வு நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 90 சதவிகித நிலக் கணக்கெடுப்புகள் நிறைவடைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

waqf நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஆ.ராசா

வக்ஃப் சொத்து என அறிவிக்கப்பட்டதை அரசு சொத்து என அடையாளம் காண்பது தொடர்பான சட்டப்பிரிவே அபத்தமானது. வக்ஃப் வாரியத்தின் சொத்துகள் அரசுக்கு சொந்தமானதாக கண்டறியப்பட்டால், அது வக்ஃப் சொத்தாக ஏற்கப்படாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் அரசு சொத்து என்பதை கண்டறிவார்கள்? நீங்களே கண்டறிந்து கையகப்படுத்துவீர்களா?

வக்ஃப் வாரியத்துக்கும் அரசுக்கும் பிரச்னை ஏற்பட்டால் நில அளவை அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு ஆட்சியர் எப்படி நீதிபதியாகச் செயல்பட முடியும்?

மேம்படுத்தல் என்ற பெயரில் வக்ஃப் கோட்பாடு சிதைகிறது. சட்டத்தின் அடிப்படையில் வக்ஃப் சொத்துகளை கையகப்படுத்த முயற்சிக்கிறது. அரசியல் வேறு, மதம் வேறு; அரசியலில் இருந்து மதத்தைப் பிரித்துப் பாருங்கள்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನಮ್ಮಲ್ಲಿ ಯಾವುದೇ ಪೈಪೋಟಿ ಇಲ್ಲ: ಯಾರೇ ಕೆಪಿಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರಾದ್ರೂ ನಮಗೆ ಖುಷಿ- ಸಚಿವ ಈಶ್ವರ್ ಖಂಡ್ರೆ

ನವದೆಹಲಿ,ಏಪ್ರಿಲ್,4,2025 (www.justkannada.in): ಕೆಪಿಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರ ಬದಲಾವಣೆ ಕುರಿತು ಚರ್ಚೆ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ...

ഒഡീഷയില്‍ പള്ളിയില്‍ അതിക്രമിച്ച് കയറി പൊലീസ്; വൈദികന്‍ ഉള്‍പ്പെടെയുള്ളവര്‍ക്ക് മര്‍ദനമേറ്റു

ഭുവനേശ്വര്‍: ജബല്‍പൂരിന് പിന്നാലെ ഒഡീഷയിലും വൈദികന് നേരെ മര്‍ദനം. ബെഹരാംപൂര്‍ ലത്തീന്‍...

Modi TN Visit: `ராமேஸ்வரம், மதுரை' – பிரதமர் மோடியின் தமிழக விசிட்டும், தகிக்கும் அரசியல் களமும்

டெல்லிக்கு அ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, பா.ஜ.க மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பான பரபரப்பு,...

Off The Record : మాజీ ఎమ్మెల్యేలు జీవన్ రెడ్డి, షకీల్ గులాబీ పార్టీకి తలనొప్పిగా మారారా

ఆ మాజీ ఎమ్మెల్యేలు ఇద్దరూ.. గులాబీ పార్టీకి తలనొప్పిగా మారారా..? కేసుల్లో...