6
Sunday
April, 2025

A News 365Times Venture

எம்புரான்: “முல்லைப் பெரியாறு குறித்த பொய் காட்சிகளை நீக்குக" – கம்பத்தில் விவசாயிகள் போராட்டம்

Date:

அண்மையில் நடிகர் மோகன்லால் நடிப்பில், இயக்குநர் பிரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான் திரைப்படம் வெளிவந்தது.

இத் திரைப்படத்தில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், அணைக்கு எதிரான காட்சிகளை நீக்காவிடில், திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனர் கோபாலனை கண்டித்து அந்த நிறுவனங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

முல்லைப்பெரியாறு அணை – எம்புரான்

அதன்படி இன்று காலை கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் திரண்ட விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக காந்திசிலை அருகே உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் அலுவலகம் நோக்கி வந்தனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் காந்திசிலை அருகே போராட்டத்தை நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம்,

”அணை உடையாது வலுவாக இருக்கிறது என உச்சநீதிமன்றமே பலமுறை தெளிவுபடுத்திவிட்டது. ஆனால் எம்புரான் படத்தில் அணை உடையும் மக்களுக்கு ஆபத்து என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதுபோல பல இடங்களில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் தான். அவர் தமிழகத்தில் பல கிளைகளை நடத்தி வருகிறார். இந்தக் கிளைகளில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனமாக உள்ளது.

போராட்டம்

ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலன், தமிழகத்துக்கு எதிராக படம் எடுத்திருக்கிறார். இதை கேட்க தமிழகத்தில் ஆள்கள் இல்லை.

இதுபோல கேரளாவுக்கு எதிராக ஒரு படத்தை தமிழகத்தில் எடுத்து கேரளாவில் திரையிட முடியுமா. எம்புரான் படத்தில் அணைக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் முன் விவசாய சங்கங்கள் மட்டுமில்லாது அரசியல் கட்சியினர், பிற அமைப்பினரை சேர்த்து முற்றுக்கை போராட்டங்களை நடத்துவோம்.

படக்குழு தமிழக விவசாயிகளிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் தமிழக அரசு எம்புரான் படத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்துவோம்” என்றார். 

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

KCR : తెలంగాణ ప్రజల హితమే బీఆర్ఎస్‌కు ధ్యేయం

KCR : తెలంగాణ కోసం దశాబ్దాల ఉద్యమానికి నాంది పలికిన...

ನಮ್ಮಲ್ಲಿ ಯಾವುದೇ ಪೈಪೋಟಿ ಇಲ್ಲ: ಯಾರೇ ಕೆಪಿಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರಾದ್ರೂ ನಮಗೆ ಖುಷಿ- ಸಚಿವ ಈಶ್ವರ್ ಖಂಡ್ರೆ

ನವದೆಹಲಿ,ಏಪ್ರಿಲ್,4,2025 (www.justkannada.in): ಕೆಪಿಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರ ಬದಲಾವಣೆ ಕುರಿತು ಚರ್ಚೆ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ...

ഒഡീഷയില്‍ പള്ളിയില്‍ അതിക്രമിച്ച് കയറി പൊലീസ്; വൈദികന്‍ ഉള്‍പ്പെടെയുള്ളവര്‍ക്ക് മര്‍ദനമേറ്റു

ഭുവനേശ്വര്‍: ജബല്‍പൂരിന് പിന്നാലെ ഒഡീഷയിലും വൈദികന് നേരെ മര്‍ദനം. ബെഹരാംപൂര്‍ ലത്തീന്‍...

Modi TN Visit: `ராமேஸ்வரம், மதுரை' – பிரதமர் மோடியின் தமிழக விசிட்டும், தகிக்கும் அரசியல் களமும்

டெல்லிக்கு அ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, பா.ஜ.க மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பான பரபரப்பு,...