2
Wednesday
April, 2025

A News 365Times Venture

`தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு…' – உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

Date:

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புத்தாண்டு விழாவான உகாதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதல்வரின் Ugadi வாழ்த்து செய்தி:-

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் உகாதி திருநாள் நாளை (30-03-2025) கொண்டாடப்படுகிறது.

முதல்வரின் வாழ்த்து செய்தி

தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது கழக அரசு. உகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இரத்து செய்யப்பட்டாலும் 2006-ஆம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆவார்.

‘சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு’

தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், நாடாளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில்… நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம். மேலும், அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகிறது.

ஸ்டாலின்

இன்று தென்மாநிலங்கள் பொருளாதாரரீதியாக அடைந்துள்ள வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய மொழிப்போர்தான். இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது உகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன்.

அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், வண்ணக்கோலம் என எழுச்சியோடு புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കുട്ടികള്‍ പഠിക്കുന്ന മന്ത്രിയുടെ പേരാവാം, എന്നാല്‍ രാജ്യം കണ്ട കൊടുംകലാപകാരിയുടെ പേര് പാടില്ല; എമ്പുരാന്‍ വിവാദത്തില്‍ ടി. സിദ്ദിഖ്

തിരുവനന്തപുരം: എമ്പുരാന്‍ സിനിമയിലെ വില്ലന്‍ കഥാപാത്രത്തിന്റെ ബജ്‌റംഗി എന്ന പേര് മാറ്റി...

ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க“உண்மை நிலவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். மூன்று...

KCR: కాంగ్రెస్ పాలనపై కేసీఆర్ కీలక వ్యాఖ్యలు

KCR: బీఆర్‌ఎస్‌ సిల్వర్‌జూబ్లీ సభ కోసం ప్రజలు ఆసక్తిగా ఎదురు...

ನಾನು ಯಾವ ಜನ್ಮಕ್ಕೂ ಕಾಂಗ್ರೆಸ್ ಗೆ ಹೋಗಲ್ಲ: ಬಿಜೆಪಿಯನ್ನ ಬಿಎಸ್ ವೈಗೆ  ಲೀಸ್ ಕೊಟ್ಟಿದ್ದೀರಾ..? ಶಾಸಕ ಯತ್ನಾಳ್ ಕಿಡಿ

ಕೊಪ್ಪಳ,ಮಾರ್ಚ್,31,2025 (www.justkannada.in): ತಮ್ಮನ್ನು ಬಿಜೆಪಿ ಪಕ್ಷದಿಂದ ಉಚ್ಚಾಟನೆ ಮಾಡಿರುವ ಬಿಜೆಪಿ...