1
Tuesday
April, 2025

A News 365Times Venture

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து செங்கோட்டையன்; டெல்லிக்குப் படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்

Date:

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பல சிக்கல்களால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது.

இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அமித்ஷா உடனான சந்திப்பு

அதற்கேற்ப மார்ச் 25 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர்.

டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியாரைத் தொடர்ந்து செங்கோட்டையன் இன்று (மார்ச் 29) திடீரென டெல்லி புறப்பட்டிருக்கிறார்.

மத்திய படை பாதுகாப்பை செங்கோட்டையனுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

எடப்பாடி, செங்கோட்டையன்

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “செங்கோட்டையன் டெல்லிக்குச் செல்வது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று பதிலளித்திருக்கிறார்.

இதற்குமுன் எடப்பாடிக்கும்- செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Waqf bill: వక్ఫ్ బిల్లుపై ప్రతిపక్షాల సమావేశం.. మద్దతు ఇవ్వకూడదని నిర్ణయం..

Waqf bill: బుధవారం పార్లమెంట్ ముందుకు వక్ఫ్ సవరణ బిల్లు రాబోతోంది....

ಪರೋಕ್ಷ ಬೆಂಬಲ ಅಂತಾ ಇಲ್ಲ: ಯತ್ನಾಳ್ ಬಗ್ಗೆ ಪಕ್ಷ ನಿರ್ಧಾರ ಮಾಡುತ್ತೆ- ಮಾಜಿ ಸಚಿವ ಶ್ರೀರಾಮುಲು

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,31,2025 (www.justkannada.in):  ಶಾಸಕ ಬಸನಗೌಡ ಪಾಟೀಲ್ ಗೆ ನನ್ನದು ಪರೋಕ್ಷ...

രാജസ്ഥാനിലെ കെമിക്കല്‍ ഫാക്ടറിയില്‍ നിന്നും വിഷവാതകം; മൂന്ന് പേര്‍ മരിച്ചു, 50 പേര്‍ ആശുപത്രിയില്‍

ജയ്പൂര്‍: രാജസ്ഥാനില്‍ കെമിക്കല്‍ ഫാക്ടറിയിലെ ടാങ്കറിനുള്ളില്‍ നിന്നും വിഷവാതകം ശ്വസിച്ചതിനെ തുടര്‍ന്ന്...

Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் – என்ன முடிவெடுக்கும் அதிமுக?

இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக...