1
Tuesday
April, 2025

A News 365Times Venture

TVK: டார்கெட் 'கருணாநிதி' குடும்பம்; பெண் வாக்காளர்களுக்கு குறி – பொதுக்குழுவில் போடப்பட்ட ஸ்கெட்ச்

Date:

‘தவெகவின் முதல் பொதுக்குழு!’

தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்வின் ஒவ்வொரு பேச்சையும் உடைத்துப் பார்த்தால் நிறையவே அரசியல் செய்திகளை உள்ளடக்கி வைத்திருக்கிறார்கள். திமுக – பாஜக தவிர்த்து அத்தனை கட்சிகளையும் கூட்டணிக்கு அழைக்கும் வகையில் ஆதவ் பேசியிருக்கிறார். மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவசப் பயணம் போன்ற மகளிர் நலத்திட்டங்களை பெண் நிர்வாகிகளை வைத்தே விமர்சிக்க செய்திருக்கின்றனர்.

விஜய்

க்ளைமாக்ஸில் மைக் பிடித்த விஜய் 2026 இல் போட்டியே TVK vs DMK க்குதான் என ஒரே போடாக போட்டார். ஒட்டுமொத்தமாக இந்த விழாவின் ஹைலைட்ஸான விஷயங்கள் இங்கே.

டார்கெட் ‘கலைஞர்’ குடும்பம்:

ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, சபரீசன் என கலைஞரின் குடும்பத்தை சேர்ந்த பலரையும் பல இடங்களில் குறிப்பிட்டு விமர்சித்திருக்கின்றனர். இதற்கு ஒரு பின்னணியும் இருக்கிறது. தவெகவின் ஆண்டுவிழா பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்திருந்தது. அந்த நிகழ்வில் விஜய் அழுத்தமாக அரசியல் பேசுவார். திமுகவையும் பாஜகவையும் தீவிரமாக விமர்சிப்பார் என நிர்வாகிகள் பெருத்த எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். ஆனால், விஜய்யோ ‘What Bro…Wrong Bro…’ என விளையாட்டுத்தனமாக பேசி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை புஸ்வாணம் ஆக்கினார்.

Vijay
Vijay

‘பொதுக்குழு ப்ளான்!’

நுனிப்புல் மேய்ந்ததை போன்ற விஜய்யின் பேச்சுக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. நிர்வாகிகளின் அதிருப்தியையும் பனையூர் தரப்பு கவனித்திருக்கிறது. அது விஜய்யின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகுதான், பொதுக்குழுவில் நேரடியாகவே திமுக, பாஜகவை வலுவாக அட்டாக் செய்யும் மனநிலைக்கு விஜய் வந்திருக்கிறார்.

தான் மட்டுமில்லாமல் முக்கிய நிர்வாகிகள் எல்லாரும் சேர்ந்து திமுக – பாஜக எதிர்ப்பை வலுவாக்கும் வகையில் பேச திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, பனையூரில் கடந்த சில நாட்களாக மேடையில் பேசவிருந்த நிர்வாகிகளுக்கு என்னென்ன பாய்ண்ட்டுகளை அழுத்தமாக பேச வேண்டுமென நோட்ஸ் கொடுக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

Vijay
Vijay

அதனால்தான் வழக்கமாக மேடைகளில் விஜய்க்காக துதி மட்டுமே பாடும் பொதுச்செயலாளர் ஆனந்த் கூட திமுகவை அட்டாக் செய்யும் வகையில் ‘வாரிசு அரசியல்’ என்றெல்லாம் பேசியிருந்தார். சேலம் மத்திய மாவட்டத்தை சேர்ந்த பெண் நிர்வாகி நந்தினி பேசுகையில் ‘எல்லா பக்கமும் டாஸ்மாக்கை திறந்து வச்சிருக்கீங்க. பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பே இல்லை. கனிமொழி அக்கா.. இந்த பிரச்சனைக்கெல்லாம் உங்க அண்ணங்கிட்ட சொல்லி தீர்வு காணலாமில்ல. இல்லனா எங்க அண்ணன் 2026 இல் மொத்தமாக எல்லாவற்றுக்கு தீர்வை கொடுப்பார்.’ எனப் பேசியிருந்தார்.

தவெக மேடையில் முதல் முதலாக கனிமொழியை அட்டாக் செய்த நிகழ்வு இது. அடுத்ததாக பேசிய பெண் நிர்வாகி யாஷ்மின், ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல, சுதந்திரம் இல்ல. இப்படியொரு சூழல்ல எப்படி உங்களை அப்பான்னு சொல்லிக்கிறீங்க.’ என ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்தார். ஹைலைட்டாக ஆதவ் அர்ஜூனா உதயநிதியையும் சபரீசனையும் வம்புக்கு இழுத்தார்.

யாஷ்மின்
யாஷ்மின்

‘உதயநிதி அட்டாக்!’

உதயநிதி சம்பந்தப்பட்ட ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ யை குறிப்பிட்டு, ‘நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை படங்களை தயாரித்தீர்கள்? எவ்வளவு சம்பாதித்தீர்கள்? என வரவு செலவு கணக்கைக் கேட்டார். மேலும், நாங்கள் பிரஷாந்த் கிஷோரை அழைத்து வந்ததற்கு விமர்சித்திருக்கிறீர்களே, நீங்கள் ஏன் உங்கள் மருமகனின் PEN நிறுவனத்தோடு ராபின் சர்மா, சுனில் ஆகியோரை இணைத்துக் கொண்டு மூன்று தேர்தல் வியூக வகுப்பாளர்களை வைத்திருக்கிறீர்கள்? என்றார். கடைசியில் மைக் பிடித்த விஜய் முதல் முறையாக ஸ்டாலினை நேரடியாக குறிப்பிட்டு ‘மன்னராட்சி முதல்வரே…’ என்று விமர்சித்தார். இப்படி கலைஞரின் குடும்பத்தினரை வரிசைக்கட்டி விமர்சிக்கும்போது வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலையை இன்னும் வளர்த்தெடுக்கலாம் என தவெக முகாம் நம்புகிறது.

கூட்டணிக்கான மெசேஜ்:

ஆதவ் பேசும்போது திமுக, பாஜக தவிர அத்தனை கட்சிகளையும் கூட்டணிக்கு அழைக்கும் விதத்திலேயே பேசுயிருந்தார். வேங்கைவயல் விவகாரம், சாம்சங் தொழிலாளர் பிரச்சனை, இஸ்லாமிய கைதிகள் விடுவிக்கப்படாதது போன்ற பிரச்சனைகளை முன்வைத்து விசிக, கம்யூனிஸ்ட்டுகள், மனித நேய மக்கள் கட்சி போன்றவற்றை சீண்டினார். ‘பா.ஜ.க எப்படி தன்னுடைய கூட்டணிக் கட்சிகளை அழிக்கிறதோ திமுகவும் அப்படித்தான் செய்கிறது.’ என்றவர், உங்கள் சின்னத்தில் நிற்க அவர்கள் எதற்கு தனிக்கட்சி நடத்த வேண்டும் என ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக பேசியிருந்தார்.

Aadhav
Aadhav

‘அதிமுகவைப் பற்றி’

எடப்பாடி – அமித்ஷா சந்திப்பு நிகழ்ந்துவிட்ட போதும் இன்னமும் அதிமுக மீது மென்மையான போக்கையே கடைபிடிக்கின்றனர். ஆதவ் பேசுகையில், ‘அதிமுகவை கூட ஏற்றுக்கொள்ளலாம். அவர்களாவது சிறுபான்மையினர் வாக்கு போகும் என தெரிந்தும் பா.ஜ.கவோடு நின்று தோற்கிறார்கள்.’ என்றார். எங்களுக்கு அதிமுக மீது எந்த பிரச்சனையும் இல்லை. பா.ஜ.க தான் பிரச்சனை என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொன்னார். இப்படி எல்லா பக்கமும் கூட்டணிக்கான தூண்டிலை ஆதவ் வீசினார்.

‘நிர்வாகிகள் நியமனம்!’

இன்னொரு பக்கம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 2026 இல் TVK vs DMK தான் என விஜய் பேசியிருக்கிறார். கூட்டணியை தீர்மானிக்கக்கூடிய முதன்மை சக்தியாக தவெக இருக்கிறதென விஜய் தரப்பு நம்புகிறது. ஆனால், ஆட்சியில் இருக்கும் திமுகவை எதிர்க்கும் அளவுக்கு தவெகவிடம் உள்கட்டமைப்பு இருக்கிறதா என்பதுதான் பெரிய கேள்வி. நிர்வாகரீதியாக கட்சியை 120 மாவட்டங்களாக பிரித்தார்கள். இன்னும் கூடுதலாக பிரிக்கும் திட்டத்தில் கூட இருப்பதாக சொல்கிறார்கள்.

Vijay
Vijay

ஆனால், 114 மாவட்டங்களுக்குதான் இப்போது வரை நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்கள். 70000 பூத் கமிட்டிகளில் 50000 பூத் கமிட்டிகளுக்குதான் நிர்வாகிகளை நியமித்திருப்பதாக சொல்கிறார்கள். நிர்வாகிகள் நியமனத்தை கூட முடிக்காமல் ஊரில் இருக்கும் அத்தனை கட்சிக்கும் கூட்டணி வகுப்பு எடுக்கிறார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் தவெகவை விமர்சிக்கிறார்கள்.

பெண் வாக்காளர்களுக்கு குறி:

நிகழ்வை முடித்துவிட்டு பெண் நிர்வாகிகளுடன் அமர்ந்து விஜய் உணவருந்திவிட்டுதான் சென்றார். நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. முக்கிய தீர்மானங்களை பெண் நிர்வாகி ஒருவர் வாசித்திருக்கிறார்.

பெண் நிர்வாகிகளை வைத்து இலவச பேருந்து மற்றும் உரிமைத்தொகை திட்டத்தை குறிப்பிட்டு விமர்சித்து பேச வைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு பெண்கள்தான் திமுகவினரின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்போகிறார்கள் என விஜய் பேசியிருக்கிறார்.

Vijay
Vijay

‘பெண்களின் வாக்கு!’

ஜெயலலிதா இல்லாததால் அதிமுகவின் மகளிர் வாக்கை இழுக்க வேண்டும் என தவெக நினைக்கிறது. திமுகவின் மகளிர் நலத்திட்டங்களை மகளிரை வைத்தே விமர்சித்து அவற்றை பேசுபொருளாக்குவதன் மூலம் திமுக ஈர்க்க நினைக்கும் மகளிரின் வாக்கையும் தங்கள் பக்கம் இழுக்க திட்டமிடுகிறார்கள்.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.11 கோடி, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.24 கோடி. இந்தப் பின்னணியில்தான் பெண்களுக்கு பொதுக்குழுவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வியூகம் இனியும் தொடரும் என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನಾಳೆಯಿಂದ ಹಾಲು ಮತ್ತು ಮೊಸರಿನ ಬೆಲೆ 4 ರೂ. ಹೆಚ್ಚಳ: ಪರಿಷ್ಕೃತ ದರ ಜಾರಿ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,31,2025 (www.justkannada.in):   ರಾಜ್ಯ ಸರ್ಕಾರ  ಇತ್ತೀಚೆಗೆ  ಹಾಲು ಮತ್ತು ಮೊಸರಿನ...

ലഹരി ഉപയോഗിക്കുന്ന സഹപ്രവര്‍ത്തകരുമായി ഇനി അഭിനയിക്കില്ല: വിന്‍സി അലോഷ്യസ്

കോഴിക്കോട്: ലഹരി ഉപയോഗിക്കുന്ന സഹപ്രവര്‍ത്തകരുമായി അഭിനയിക്കില്ലെന്ന് അഭിനേത്രി വിന്‍സി അലോഷ്യസ്. കെ.സി.വൈ.എം...

Chennai: `வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது' -VR மால் வழக்கில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருமங்கலத்தில் செயல்படும் வி.ஆர்...

MS Dhoni: ఎంఎస్ ధోనీ బ్యాటింగ్‌ ఆర్డర్‌పై చెన్నై కోచ్‌ ఏమన్నాడంటే?

ఐపీఎల్ 2025లో చెన్నై సూపర్‌ కింగ్స్‌ మాజీ కెప్టెన్ ఎంఎస్ ధోనీ...