31
Monday
March, 2025

A News 365Times Venture

"திமுக மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை" – மருத்துவர் கிருஷ்ணசாமி விமர்சனம்

Date:

தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (மார்ச் 27) உள் இட ஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமி

அப்போது, “டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி ஊழல் என்றால் அமலாக்கத்துறை முறையாக ஆய்வு செய்யவில்லை. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதால் அது குறித்து அமலாக்கத்துறை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் ஓ.பி.எஸ் வெளியில் பேசுவதைத் தவிர்த்து, கட்சிக்குள் பேசி பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.

மேலும் 2026 தேர்தலில் அ.தி.மு.க வலிமையாக இருக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும்.

மற்ற நாடுகளில் எல்லாம் 8ஆம் வகுப்பிலேயே தொழிற்கல்வி கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இங்கு இன்னும் ஏட்டுக் கல்விதான் கற்றுத் தரப்படுகிறது.

டாக்டர் கிருஷ்ணசாமி

தி.மு.க-வினர் மொழியை மட்டும் சிந்திக்கின்றனர். மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை. 3 மொழி மட்டும் இல்லை 4 மொழி கற்றுக்கொண்டால் கூட தவறில்லை.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியைத்தான் கற்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. மத்திய அரசை எதிர்க்க வேறு வழியில்லாமல் தி.மு.க இந்தியை வைத்து அரசியல் செய்கிறது.

தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தி.மு.க செய்தது என்ன? இந்தி கற்பதால் தமிழ் அழிந்து விடும் எனக் கூறுவது தவறு. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது.

தமிழக மக்களுக்கு இந்தியன் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தைத் தனித்து வைத்து அரசியல் செய்வதற்காகத்தான் தி.மு.க-வினர் இந்தியை எதிர்க்கிறார்கள்.

திமுக

பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் கொள்கை. அதை நிறைவேற்றித் தருவோம் என்று கூறிய பா.ஜ.க எங்களை ஏமாற்றி விட்டதால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகிக்கும். அப்போது எங்களது கொள்கை நிறைவேற்றப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വീണ്ടും തെരുവിലായി ഫലസ്തീനി ജനത; അധിനിവേശ വെസ്റ്റ്ബാങ്കിലെ അഭയാര്‍ത്ഥി ക്യാമ്പുകള്‍ ഇസ്രഈല്‍ പൊളിച്ചുനീക്കുന്നു

വെസ്റ്റ്ബാങ്ക്: ഫലസ്തീന്‍ പൗരന്മാരെ അഭയാര്‍ത്ഥി ക്യാമ്പുകളില്‍ നിന്നും കുടിയൊഴിപ്പിക്കാന്‍ ഇസ്രഈല്‍ നീക്കം....

கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் – இது சுங்கச்சாவடியின் அவலம்

செப்டம்பர், 2021."சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு...

Vizag: ప్రేమించిన వ్యక్తి మరొకరితో పెళ్లి.. 14 వాహనాలను దగ్ధం చేసిన యువతి!

Vizag: విశాఖపట్నం జిల్లాలో దారుణం చోటు చేసుకుంది. ప్రేమించిన వ్యక్తి మరొకరిని...

ಮುಸ್ಲೀಮರಿಗೆ ಮೀಸಲಾತಿ : ಏ.10ರ ಬಳಿಕ ರಾಜ್ಯ ಪ್ರವಾಸ ಮಾಡಿ ಹೋರಾಟ-ಬಿವೈ ವಿಜಯೇಂದ್ರ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,29,2025 (www.justkannada.in):  ಗುತ್ತಿಗೆಯಲ್ಲಿ ಮುಸ್ಲೀಮರಿಗೆ 4% ಮೀಸಲಾತಿ ನೀಡಲು ಮುಂದಾಗಿರುವ...