30
Sunday
March, 2025

A News 365Times Venture

'எல்லாம் நன்மைக்கே…' – எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ்

Date:

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அதிமுக சார்பில் டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய அலுவலகத்தை பார்வையிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி பயணம் குறித்து நாளை விரிவாக தெரிவிப்பதாக கூறிச் சென்றார். எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்னையிலிருந்து அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அமித்ஷா சந்திப்பு
அமித்ஷா சந்திப்பு

இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி- அமித்ஷா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” ‘எல்லாம் நன்மைக்கே’. அதிமுக கட்சியில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைவதுதான் என்னுடைய விருப்பம். அமிஷாவை அவர் சந்தித்தது குறித்து அவரிடம் கேளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

3,500.86 ಕೋಟಿ ರೂ. ಬಂಡವಾಳ ಹೂಡಿಕೆಯ 69 ಯೋಜನೆಗಳಿಗೆ ಅನುಮೋದನೆ- ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,29,2025 (www.justkannada.in): ವಿಜಯಪುರ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿ ಕರ್ನಾಟಕ ಸೋಪ್ಸ್‌ ಆ್ಯಂಡ್‌ ಡಿಟರ್‌ಜೆಂಟ್ಸ್‌...

ടെസ്‌ല ഷോറൂമുകള്‍ക്ക് മുമ്പില്‍ വീണ്ടും പ്രതിഷേധം; ജര്‍മനിയില്‍ ഏഴോളം കാറുകള്‍ അഗ്നിക്കിരയായി

ന്യൂയോര്‍ക്ക്: ഇലോണ്‍ മസ്‌കിനെതിരെ ടെസ്‌ല ഷോറൂമുകള്‍ക്ക് മുമ്പില്‍ പ്രതിഷേധം. യു.എസ് പ്രസിഡന്റ്...

உயிரை மாய்த்த மாணவி… தொடரும் நீட் மரணங்கள்; "இது பச்சை படுகொலை!"- சீமான், அன்புமணி கண்டனம்!

சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி தேவதர்ஷினி. இவர் நீட் பயிற்சி மையத்தில்...

Kamareddy: పండగ పూట విషాదం.. చెరువులో పడి తల్లి, ముగ్గురు పిల్లలు మృతి

కామారెడ్డి జిల్లా ఎల్లారెడ్డి మండలం వెంకటాపూర్ అగ్రహారం గ్రామంలో పండగ పూట...