தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒருபகுதியாக, சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது எழுந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், “தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய போடுகிறார்கள். அதில், EB கெபாசிட்டி 100 KV மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. வெயில் காலத்தில் மின்சாரம் போதவில்லை. அதனால், 100 KV-யை 120 KV-யாகக் கொடுத்தால் சௌரியமாக இருக்கும்.
அதனால், EB-க்கு எந்த இழப்பும் இல்லை. மாப்பிள்ளைக்கு நன்றாகத் தெரியும்.” என்று அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு பேசினார். உடனே அவையில் சிரிப்பலை எழ, “சாரி சாரி பேசிப் பேசி அப்படியே வந்துவிட்டது. 100 KV-யை 120 KV-யாகக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.” என்று கோரிக்கையாகக் கூறி அமர்ந்தார்.

அதைத்தொடர்ந்து பதிலளித்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மிக விரைவாக அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது. துறை அதிகாரிகளிடத்தில் பேசி அதற்கு ஆவணம் செய்யப்படும்” என்று கூறி அமர்ந்தார்.