27
Thursday
March, 2025

A News 365Times Venture

Parliament: பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

Date:

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் – மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீரமைப்பு, வக்காளர் அடையாள அட்டை குளறுபடி உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை அமைதியாகும்படி சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அமளி கட்டுக்குள்வரவில்லை என்பதால் மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

நாடாளுமன்றம்

மாநிலங்களவையில் மத்திய சட்டப்பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, “ காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவர், முக்கியப் பொறுப்பில் இருப்பவர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக பேசுகிறார். இது எப்படி சரியாகும். அண்ணல் அம்பேத்கர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அறவே கூடாது என வலியுறுத்தியிருக்கும் நிலையில், சட்டத்தை திருத்துவோம் எனப் பேசியிருக்கிறார். இது எப்படி சரியான நடைமுறையாகும்” எனப் பேசினார்.

மத்திய அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத்தான் குறிப்பிட்டு பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பா.ஜ.க எம்.பி-களும் கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കേരളം അങ്ങനെ അംഗികരിക്കപ്പെടേണ്ടതില്ലെന്ന ചിന്ത നാടിനെതിരായത്; യു.എസ് സന്ദര്‍ശനാനുമതി നിഷേധിച്ച കേന്ദ്ര സര്‍ക്കാര്‍ നടപടിയില്‍ പി.രാജീവ്

തിരുവനന്തപുരം: യു.എസ് സന്ദര്‍ശനത്തിന് അനുമതി നിഷേധിച്ച കേന്ദ്ര വിദേശകാര്യ മന്ത്രാലയത്തിന്റെ നടപടിയില്‍...

Harish Rao : ప్రతిపక్షం గొంతు నొక్కే ప్రయత్నం.. సీఎం పై హరీశ్ రావు ధ్వజం

Harish Rao : తెలంగాణ రాజకీయాల్లో తీవ్ర చర్చనీయాంశంగా మారిన...

ಹನಿಟ್ರ್ಯಾಪ್ ಕುರಿತು ಬಿಜೆಪಿ ಆರೋಪ: ಡಿಸಿಎಂ ಡಿಕೆಶಿ ಪರ ಬ್ಯಾಟ್ ಬೀಸಿದ ಯತೀಂದ್ರ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,26,2025 (www.justkannada.in): ಹನಿ ಟ್ರ್ಯಾಪ್ ಹಿಂದೆ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ ಕೈವಾಡವಿದೆ...