26
Wednesday
March, 2025

A News 365Times Venture

2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடிகள்; பறிபோன ரூ.4,245 கோடி! – RBI நடவடிக்கை என்ன?

Date:

2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது.

கடந்த 2023-24-ம் ஆண்டில், 2.8 மில்லியன் வழக்குகளில் ரூ. 4,403 கோடி வரை நிதி மோசடிகள் பதிவாகியுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் மோசடிகளை கண்டுபிடிக்க மற்றும் புகாரளிக்க வலைதளம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் என்ன?

நிதி மோசடிகளை உடனடியாகப் புகாரளிப்பதற்காக, சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் ஃபிராட் ரிப்போர்ட்டிங் மற்றும் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதன் மூலம் மட்டும் இதுவரை 1.3 மில்லியன் புகார்களின் அடிப்படையில் சுமார் ரூ. 4,386 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“வலைதள மற்றும் மொபைல் பயன்பாட்டு அச்சுறுத்தல்களை சரிசெய்ய பிப்ரவரி 2021-ல் டிஜிட்டல் கட்டண பாதுகாப்பு கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

RBI

அந்த வழிகாட்டுதல்களை இணைய வங்கி, யு.பி.ஐ மற்றும் கிரெடிட் அல்லது டெபிட் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டண பயன்பாடுகளுக்கு வங்கிகள் செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மோசடியாளர்களை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கருவியான MuleHunter.AI-யும் RBI அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களையும் அதைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது,” என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

`மனிதாபிமானமற்ற அணுகுமுறை…' – அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில், "மார்பகத்தைப்...

Odela 2: నాన్ థియేట్రికల్’కి కళ్ళు చెదిరే డీల్

తెలుగు సినిమా పరిశ్రమలో రాబోయే సంచలన చిత్రాల్లో ఒకటిగా గుర్తింపు పొందిన...

ಮೈಸೂರಿನ MDCC ಬ್ಯಾಂಕ್ ಬಳಿ ರೈತರಿಂದ ಪ್ರತಿಭಟನೆ: ಸರ್ಕಾರದ ವಿರುದ್ದ ಶಾಸಕ ಹರೀಶ್ ಗೌಡ ಆಕ್ರೋಶ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,26,2025 (www.justkannada.in): ರೈತರಿಗೆ ಸಮಯಕ್ಕೆ ಸರಿಯಾಗಿ ಸಾಲ ನೀಡದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ...

ഇന്ത്യയും ചൈനയും അമേരിക്കയിൽ മയക്കുമരുന്ന് കടത്ത് പ്രോത്സാഹിപ്പിക്കുന്ന പങ്കാളികൾ; യു.എസ് ഇന്റലിജിൻസ് റിപ്പോർട്ട്

വാഷിങ്ടൺ: അമേരിക്കയിൽ ക്രിമിനൽ സംഘടനകൾക്ക് നിയമവിരുദ്ധമായ ഫെന്റനൈൽ മയക്കുമരുന്ന് ഉത്പാദനത്തിനായി രാസവസ്തുക്കൾ...