சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டதுடன், திமுக அரசு வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராகப் பேசினார்.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள் உள்கட்டமைப்பு பணிகள்:
– 4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன.
– 2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு… pic.twitter.com/9iWp1IhfKO— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) March 22, 2025
உங்கள் வாதமே தவறானது..
நிர்மலா சீதாராமன், “தமிழ் நாட்டில் இருந்து நாங்கள் அதிக வரிப்பணம் தருகிறோம். நாங்கள் தரும் ஒரு ரூபாய் வரிக்கு 7 பைசா தான் பெறுகிறோம்… போன்ற வாதங்களை வைக்கின்றனர். இந்த நம்பர் (தரவுகள்) எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.
உங்களுக்கு கொடுக்கப்படும் ரோடு, மெட்ரொ எல்லாம் எங்கிருந்து வருகிறது? நாட்டில் அதிகமாக உற்பத்தி இணைப்பு ஊக்குவிப்பு (Productive Linked Incentive – PLI) இங்குதான் கொடுக்கப்படுகிறது.
“இந்தியாவின் 25% எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்கள் இங்குதான் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் PLI வருகிறது, அது எங்கிருந்து வருகிறது?
ஜனரஞ்சகமாக நாங்கள் இவ்வளவு கொடுக்கிறோம், எங்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறானது. அவர்களது கால்குலேஷன் எங்கிருந்து வருகிறது என்றே எனக்குப் புரியவில்லை.” எனப் பேசினார்.
சென்னை, கோயம்புத்தூரை சுட்டிக்காட்டிய Nirmala Sitharaman
“இங்கு கோயம்புத்துர்காரர்களும் சென்னைக்காரர்களும் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டுக்கு அதிகம் வரிகொடுப்பது கோயம்புத்தூரும் சென்னையும் தான்.
இப்போது கோவில்பட்டிகாரர்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்கும்போது, கோயம்புத்தூர்காரர்கள், நாங்கள்தான் வரிகொடுத்தோம், எங்களுக்குத்தான் திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கேட்க வேண்டுமா? ‘கோவில்பட்டி எக்கேடு கேட்டால் எனக்கென்ன, அவர்களுக்கு செலவு செய்யக் கூடாது’ என சொல்லணுமா? அப்படிப்பட்ட கொள்கை இல்லை பாரத நாட்டில்.” என்கிறார்.

மும்மொழிக் கொள்கை, தொகுதி வரையறை
“அதனால் இதுபோல குதர்க்கமாக பேசுபவர்கள் நான் பட்டியலிடுபவற்றை கூட்டிக்கழித்து பார்த்துவிட்டு சொல்ல வேண்டும், எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்று.
தமிழ்நாட்டுக்கு செய்யவேண்டியவை எத்தனையோ இருந்தாலும், மும்மொழிக் கொள்கை, தொகுதிவரையறை என திசை திருப்பும் வேலைகளை செய்கின்றனர். நாங்கள் மத்திய அரசின் சார்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவோ செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.” எனப் பேசியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
