24
Monday
March, 2025

A News 365Times Venture

Fair Delimitation: "இரண்டாம்தர குடிமக்களாகிவிடும் அபாயம்" – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

Date:

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசியிருக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “1971ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக நிறைவேற்றியது. ஆனால், வட இந்திய மாநிலங்கள் அதை சரியாக நிறைவேற்றவில்லை. இன்றைக்கு மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன, வட இந்திய மாநிலங்கள் பலனடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது நியாயமனதல்ல.

தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு

பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, சிறந்த கட்டமைப்பு, சமூக நலன், GDP என அனைத்திலும் தென்னிந்திய மாநிலங்களான நாங்கள் முன்னேறியிருக்கிறோம். இந்திய நாட்டின் வளர்ச்சி, வரி உள்ளிட்டவைகளில் எங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக பெருமளவில் இருக்கிறது.

1976-ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி எந்தவித தொகுதிகளையும் குறைக்காமல் தொகுதி மறுவரையறையைச் செய்தார். 2001ம் ஆம் ஆண்டு பா.ஜ.க பிரதமாரக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் எந்தவித தொகுதிகளையும் குறைக்காமல் தொகுதி மறுவரையறையைச் செய்தார்.

அதுபோல பிரதமர் மோடியும் தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகளைக் குறைக்காமல் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மத்திய அரசு செய்ய வேண்டும்

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையால் எம்.பி தொகுதிகள் குறைக்கப்பட்டால் தென்னிந்தியா அரசியல் அதிகாரத்தை இழக்கும், எம்மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாறிவிட நேரிடும். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தென்னிந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. நாம் ஒன்றிணைந்து மாநில உரிமைக்காகப் போராட வேண்டும். தொகுதி மறுசீரமைப்பை குறித்தான அடுத்தக் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும். அங்கும் மாநில உரிமைகளுக்கான குரல்களை ஓங்கி ஒழிப்போம்” என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಂವಿಧಾನ ಬದಲಿಸುವುದಾಗಿ ನಾನು ಹೇಳಿಲ್ಲ: ಬಿಜೆಪಿ ವಿರುದ್ದ ಕಾನೂನು ಹೋರಾಟ- ಡಿಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,24,2025 (www.justkannada.in): ಸಂವಿಧಾನ ಬದಲಿಸುವುದಾಗಿ ನಾನು ಹೇಳಿಲ್ಲ. ಬಿಜೆಪಿಯವರು ಸುಳ್ಳು...

വാഴക്കുളം പാരിയത്തുകാവിൽ ഭൂമി ഒഴിപ്പിക്കാനെത്തിയ അഭിഭാഷക കമ്മീഷനെ തടഞ്ഞ് നാട്ടുകാർ

എറണാകുളം: എറണാകുളം വാഴക്കുളം പാരിയത്തുകാവ് കുടിയൊഴിപ്പിക്കലിൽ സംഘർഷം. ഭൂമി ഒഴിപ്പിക്കാൻ എത്തിയ...

மாஞ்சோலை : `தமிழக அரசின் முயற்சிகள் முக்கியமானது’ – உச்ச நீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த...

Andhra Pradesh: ఉద్యోగులకు తీపికబురు.. ఖాతాల్లో జమ అవుతోన్న నిధులు..

Andhra Pradesh: ఉద్యోగులకు శుభవార్త చెప్పింది ఆంధ్రప్రదేశ్ ప్రభుత్వం.. ఉద్యోగులకు చెల్లించాల్సిన...