19
Wednesday
March, 2025

A News 365Times Venture

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்; 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு… காற்றில் பறந்த போர் நிறுத்தம்!

Date:

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி, காசா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த… அன்று தொடங்கியது இஸ்ரேல் – காசா போர். பொதுவாக, இஸ்ரேல் தான் தாக்குதலை தொடங்கும். ஆனால், இந்தத் தடவை, வழக்கத்திற்கு மாறாக பாலஸ்தீனம் போரை தொடங்கியது.

ஏவுகணை தாக்குதல்கள், வான்வழி தாக்குதல்கள், தரைவழி தாக்குதல்கள் என போர் தொடர்ந்துகொண்டே இருக்க, பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் தொடர்ந்தன. ஒரு பக்கம் ரஷ்யா – உக்ரைன் போர், இன்னொரு பக்கம் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர்… இது ‘மூன்றாம் உலகப் போராக’ மாறலாம் என்று உலக நாடுகள் பயந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவும், கத்தாரும் இரண்டு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்தது.

இதன் விளைவாக, கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது. மேலும், இரு தரப்பும் பணய கைதிகளை விடுவித்து வந்தது. இன்னும் சில நாள்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், இஸ்ரேல் இன்று காசா மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் – காஸா போர்

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் உள்பட கிட்டதட்ட 300 பேர் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, இஸ்ரேல் காசா மீது நடத்திய முதல் மிகப்பெரிய தாக்குதல் இது. இந்தத் தாக்குதலினால் தற்போது போர் நிறுத்தம் ரத்தாகி உள்ளது. பதிலுக்கு காசாவும் தாக்க தொடங்குவார்கள். இதனால், நிலைமை இன்னமும் மோசமடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு துறை, “காசாவில் ஹமாஸ் இருக்கும் தீவிரவாத பகுதிகளில் தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

‘காசா பணய கைதிகளை விடுவிக்காததை இந்தத் தாக்குதலுக்கு காரணம்’ என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನಾವು ಬಿಜೆಪಿಯವರಂತೆ ಕೇವಲ 10% ಜನರ ಕೈಹಿಡಿದು ಶೇ90% ರಷ್ಟು ಜನರನ್ನು ಕೈ ಬಿಟ್ಟಿಲ್ಲ: ಸಿ.ಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಟೀಕೆ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,17,2025 (www.justkannada.in): ನಾವು ಸಮಾಜದ 90% ಜನರಿಗೆ ಆರ್ಥಿಕ, ಸಾಮಾಜಿಕ...

കളഞ്ഞുകിട്ടിയ എ.ടി.എം കാര്‍ഡ് ഉപയോഗിച്ച് പണം തട്ടിയ ബി.ജെ.പി നേതാവിന് സസ്പെന്‍ഷന്‍

ആലപ്പുഴ: കളഞ്ഞുകിട്ടിയ എ.ടി.എം കാര്‍ഡ് ഉപയോഗിച്ച് പണം തട്ടിയ സംഭവത്തില്‍ ബി.ജെ.പി...

“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்…” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க“முதல்வர் சொல்லியிருப்பதில் நியாயம் இருக்கிறது. பாராளுமன்றத்தில்...

Off The Record: అక్కడ బీజేపీ జిల్లా అధ్యక్షుడికి అసమ్మతి నేతలు పగలే చుక్కలు..?

Off The Record: నల్లగొండ జిల్లా బీజేపీ అధ్యక్షుడుగా నాగం వర్షిత్...