15
Saturday
March, 2025

A News 365Times Venture

நாடாளுமன்றம் : அமளிக்கு நடுவே நிறைவேறிய இரு முக்கிய மசோதாக்கள்..! – முழு விவரம்

Date:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளே தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதானுக்கும் இடையே பெரும் வார்த்தை போர் வெடித்தது.

இன்னொரு பக்கம், வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்து, அதை சபாநாயகர்கள் ஏற்காத நிலையில் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையிலும் மத்திய அரசு இரண்டு முக்கிய மசோதாகளை நிறைவேற்றி இருக்கிறது.

சரக்கு போக்குவரத்து மசோதா 2024:

மத்திய கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துதுறை அமைச்சர் சர்பாணந்த் சோனவால், கடந்த 2024 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரக்கு போக்குவரத்து மசோதா 2024 மக்களவையில் அறிமுகம் செய்திருந்தார்.

சுமார் 169 ஆண்டு பழமையான இந்திய சரக்கு போக்குவரத்து சட்டம் 1856-க்கு மாற்றாக இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான விவாதம் மார்ச் 10-ம் தேதி நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர் சார்பானந்த் சோனவால், “முதலீட்டாளர்களுக்கு கப்பல் வழி சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பிரச்னைகளை களைவதற்கான பல்வேறு அம்சங்கள் மசோதாவில் கொண்டுவரப்பட்டிருக்கிறது” என்றார். கப்பல் வழியாக சரக்கு போக்குவரத்தை செய்யக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களில் என்ன வகையான பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது, அதன் அளவு எவ்வளவு, அவை சென்று சேரும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக இடம் பெற்று இருக்கும்.

இதன் மூலமாக முறைகேடுகள் தடுக்கப்படுவதுடன் வெளிப்படை தன்மையும் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் பேசினார். மேலும் இது சட்டபூர்வமான ஒரு ஆவணம் என்றும், அவர் விளக்கம் அளித்தார். மேலும் மாறி உள்ள நவீன காலத்திற்கு ஏற்ப சரக்கு போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் தேவைப்பட்டது. அதற்காகத்தான் இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதாவில் சிறு வணிகங்களை பாதிக்காத வகையில் சரக்கு கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் விவரங்கள் இடம்பெறவில்லை, குறிப்பாக பெரிய கப்பல் நிறுவனங்கள் எந்த விதமான ஒழுங்கு முறையும் இல்லாமல் அதிக விலையை நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் வகையில் மசோதாவில் பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறது. இது கடல்சார் வணிகத்திலிருந்து சிறு நிறுவனங்களை அகற்றும் என குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

மசோதாவில் சில திருத்தங்களை கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கொண்டு வந்த திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ரயில்வே திருத்த மசோதா:

இந்திய ரயில்வே வாரியச் சட்டம் 1905 ரத்து செய்யும் வகையில் ரயில்வே திருத்த மசோதா 2024 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 10-ம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், `சுதந்திர அமைப்பாக உள்ள ரயில்வே வாரியத்தை அரசாங்கமே கையகப்படுத்துவதற்காக தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இப்படி ஒவ்வொரு சுதந்திர அமைப்பின் அதிகாரங்களை பறித்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும்’ என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

“ஏற்கனவே மிக மோசமாக உள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை மேம்படுத்த தவறிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த மசோதாவை மேலும் அதிக விவாதங்களுக்கு உட்படுத்தும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். ஆனால் எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

அஸ்வினி வைஷ்ணவ்

விவாதத்தின் மீது பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்த புதிய மசோதாவால் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படாது, ரயில்வே வாரியங்கள், மண்டலங்கள் ஆகியவற்றின் உற்பத்தி, நோக்கம், செயல்பாடுகள் அப்படியே தான் இருக்கும்” என்றார்.

பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதால், மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு விரைவில் சட்டமாக கொண்டு வரப்பட உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಾ.22ಕ್ಕೆ ಕ್ಷೇತ್ರ ಪುನರ್‌ ವಿಂಗಡನೆ ವಿರೋಧಿ ಸಭೆ:  ತಮಿಳುನಾಡು ಸಿಎಂ ಸ್ಟಾಲಿನ್‌ ಗೆ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಪತ್ರ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,13,2025 (www.justkannada.in):  ಮಾರ್ಚ್ 22ಕ್ಕೆ ನಡೆಯುವ ಕ್ಷೇತ್ರ ಪುನರ್‌ ವಿಂಗಡನೆ...

ഫലസ്തീന്‍ അനുകൂല വിദ്യാര്‍ത്ഥി മഹ്‌മൂദ് ഖലീലിനെ മോചിപ്പിക്കണം; ട്രംപ് ടവറില്‍ പ്രതിഷേധിച്ച് ജൂത സംഘടന

ന്യൂയോര്‍ക്ക്: കൊളംബിയ സര്‍വകലാശയില്‍ ഫലസ്തീന്‍ അനുകൂല പ്രക്ഷോഭങ്ങള്‍ക്ക് നേതൃത്വം കൊടുത്ത മഹ്‌മൂദ്...

Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' – சர்ச்சையைக் கிளப்பும் பவன் கல்யாண்

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து...

Trump: ఉక్రేనియన్ సైనికుల ప్రాణాలను కాపాడమని విజ్ఞప్తి చేసిన ట్రంప్.. పుతిన్ ఏమన్నారంటే?

రష్యా-ఉక్రెయిన్ దేశాల మధ్య జరుగుతున్న పరస్పర దాడులు రెండో ప్రపంచ యుద్ధాన్ని...