16
Sunday
March, 2025

A News 365Times Venture

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" – மாணவர்களுக்கு மோடி அறிவுரை

Date:

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ‘பரிக்சா பே சார்ச்சா’ என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10)  மாணவர்களுடன் மோடி கலந்துரையாடி இருக்கிறார். மாணவர்களுடன் பேசிய மோடி “தேர்வுகள் மட்டுமே எல்லாம் கிடையாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

பிரதமர் மோடி

மாணவர்கள் தங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்தி, கவனச் சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். தங்களின் எல்லைகளை விரிவாக்கி, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மனதைத் தயார் செய்ய வேண்டும். நமது சமூகத்தில், மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், வீட்டில் பதற்றமடையும் சூழல் உள்ளது.

உங்களுக்கு அழுத்தம் இருக்கலாம். ஆனால், நீங்கள் அதற்கு ஆளாகாமல், அதனைப் பற்றிக் கவலைப்படாமல் உங்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்கள் ரோபோக்கள் அல்ல. நாம் முழுமையான வளர்ச்சிக்காகப் படிக்கிறோம். புத்தகங்களில் சிக்கிக் கொண்டால் மாணவர்கள் வளர முடியாது.

பிரதமர் மோடி

மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான செயலைச் செய்யும்போதுதான் அவர்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும். தேர்வுதான் அனைத்தும் என்ற மனநிலையுடன் வாழக்கூடாது. முடிந்தவரை அறிவைப் பெற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಯತೀಂದ್ರರ ಕಾಲಜ್ಞಾನ ಕೃತಿ ಸರ್ವಕಾಲಕ್ಕೂ ಪ್ರಸ್ತುತ: ಎಚ್.ಎ.ವೆಂಕಟೇಶ್

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,15,2025 (www.justkannada.in): ಯತೀಂದ್ರರವರು ರಚಿಸಿದ ಕಾಲಜ್ಞಾನದ ಕೃತಿಯಲ್ಲಿ ಎಲ್ಲಾ ಸಂದೇಶವು...

ഹോളി കളര്‍ ശരീരത്തിലാക്കാന്‍ സമ്മതിച്ചില്ല; യു.പിയില്‍ മുസ്‌ലിം യുവാവിനെ അടിച്ചുകൊന്ന് അക്രമികള്‍

ലഖ്നൗ: ഉത്തര്‍പ്രദേശില്‍ ഹോളി കളര്‍ ശരീരത്തിലാക്കാന്‍ വിസമ്മതിച്ചതിന് മുസ്‌ലിം യുവാവിനെ അടിച്ചുകൊന്ന്...

Chennai: ரூ.2,000 மாதக் கட்டணம்; ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கலாம்..!

இப்பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணிக்கிறார்கள். அலுவலகம் செல்வோருக்கு வசதியாக...

Emergency Landing: శంషాబాద్ ఎయిర్‌పోర్టులో విమానం అత్యవసర ల్యాండింగ్..

శంషాబాద్ రాజీవ్ గాంధీ ఇంటర్నేషనల్ ఎయిర్‌పోర్టులో విమానం అత్యవసర ల్యాండింగ్ అయింది....