15
Saturday
March, 2025

A News 365Times Venture

ADMK: “எடப்பாடி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை..'' -செங்கோட்டையன் ஓபன் டாக்

Date:

தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு – அவிநாசி’ திட்டம் நிறைவேறியிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே இருந்த பழைய திட்டத்தை முற்றிலுமாக மாற்றி, பவானி ஆற்றின் கீழுள்ள காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து ஆண்டுதோறும் 1.5 டி.எம்.சி தண்ணீரை எடுத்து அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். அத்துடன், ரூ.1,490 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. விரிவான ஆய்வுப் பணிக்குப் பிறகு 2019-ல் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அ.தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்டத்தின் 80 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டிருந்தன. ஆனால், இதன் பணிகள் முழுவதுமாக முடியக் கால தாமதமாகிவிட்டது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்

இதையடுத்து கடந்த  ஆண்டு ஆக.17ம் தேதி இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்திருந்தார்.

இது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட ஆண்டு கால கோரிக்கை என்பதால், ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து நற்பெயர் வாங்க முயற்சிப்பதாகவும், ‘திட்டத்தை அறித்தது ஒருவர், அதைத் திறந்து வைத்து மக்களிடம் பெயர் வாங்குபவர் வேறு ஒருவரா…’ என கொந்தளித்த அ.தி.மு.க’வினர் அத்திகடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நேற்று (9.2.2025) நடத்தினர்.  

செங்கோட்டையன்

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது ‘அ.தி.மு.க’விற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டை இது குறித்து பேசுகையில், “அத்திக்கடவு – அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” என்று விளக்கமளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಾ.22ಕ್ಕೆ ಕ್ಷೇತ್ರ ಪುನರ್‌ ವಿಂಗಡನೆ ವಿರೋಧಿ ಸಭೆ:  ತಮಿಳುನಾಡು ಸಿಎಂ ಸ್ಟಾಲಿನ್‌ ಗೆ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಪತ್ರ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,13,2025 (www.justkannada.in):  ಮಾರ್ಚ್ 22ಕ್ಕೆ ನಡೆಯುವ ಕ್ಷೇತ್ರ ಪುನರ್‌ ವಿಂಗಡನೆ...

ഫലസ്തീന്‍ അനുകൂല വിദ്യാര്‍ത്ഥി മഹ്‌മൂദ് ഖലീലിനെ മോചിപ്പിക്കണം; ട്രംപ് ടവറില്‍ പ്രതിഷേധിച്ച് ജൂത സംഘടന

ന്യൂയോര്‍ക്ക്: കൊളംബിയ സര്‍വകലാശയില്‍ ഫലസ്തീന്‍ അനുകൂല പ്രക്ഷോഭങ്ങള്‍ക്ക് നേതൃത്വം കൊടുത്ത മഹ്‌മൂദ്...

Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' – சர்ச்சையைக் கிளப்பும் பவன் கல்யாண்

தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து...

Trump: ఉక్రేనియన్ సైనికుల ప్రాణాలను కాపాడమని విజ్ఞప్తి చేసిన ట్రంప్.. పుతిన్ ఏమన్నారంటే?

రష్యా-ఉక్రెయిన్ దేశాల మధ్య జరుగుతున్న పరస్పర దాడులు రెండో ప్రపంచ యుద్ధాన్ని...