15
Saturday
March, 2025

A News 365Times Venture

Delhi: `வெற்றி பெற்றால்தான் எதிர்காலம்' – கட்டளையிட்ட தலைமை… டெல்லி பாஜக செய்து முடித்தது எப்படி?

Date:

தணிந்த ஏக்கம்..!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக-வின் 28 ஆண்டுக்கால காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மூன்றாவது முறையாகவும் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும், அதன் அத்தனை நகர்வுகளையும் முடிவு செய்யும் தலைநகர் டெல்லி எட்டாக் கனியாகவே இருக்கிறதே என்ற அவர்களது ஏக்கம் தணிந்திருக்கிறது

இமாலய வெற்றியுடன் அக்கட்சி டெல்லி சட்டமன்றத்திற்குள் நுழைகிறது. அதற்குச் சமமான மகிழ்ச்சி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா என ஆம் ஆத்மி கட்சியின் அத்தனை முக்கிய தலைவர்களையும் மண்ணை கவ்வ வைத்தது. அதேபோல காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியத்தைப் பெற்றது, பாஜக முகாமுக்கு எக்ஸ்டரா போனஸ்.

நட்டா

ஆனால் இதையெல்லாம் பாஜக சுலபமாகச் செய்துவிடவில்லை. கட்சி தலைமையின் கண்டிப்பான உத்தரவுகளை ஏற்று கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளால் சாத்தியமாகி இருக்கிறது. அதாவது மூல காரணம், பாஜக தேசிய தலைமை எடுத்த பல அதிரடி முடிவுகள்.

“முதல்வர் யார்… அமைச்சர்கள் யார் என்ற எந்த கேள்வியும் யாரும் கேட்காதீர்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், கலகம் செய்யாதீர்கள். வெற்றிக்காக உழையுங்கள், வெற்றியை ஈட்டித் தாருங்கள். உங்களுக்குத் தேவையானவற்றைக் கட்சித் தலைமை செய்து தரும்” எனத் தேசிய தலைமை கொடுத்த உத்வேகம், பாஜக தொண்டர்களை உற்சாகத்துடன் வேலை செய்யத் தூண்டியது.

தலைமை கொடுத்த வார்னிங்..!

குறைந்தபட்சம் 30 கூட்டங்களுக்கு மேலாக டெல்லி நிர்வாகிகளுடன் நடத்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள், அனைத்து கூட்டங்களிலும் அழுத்தமாகச் சொல்லி வலியுறுத்தியது. “டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கிட்டத்தட்ட 30 வருடங்களாகப் போகிறது. இதுதான் நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளும் கடைசியானது. இதைச் சரியாக நீங்கள் செய்து முடிக்கவில்லை என்றால், உங்கள் அரசியல் எதிர்காலத்தை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்” எனத் திட்டவட்டமாகச் சொல்லி இருந்தார்கள்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜக தோல்விக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டது போன்ற பல விஷயங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஹரியானாவில், ராஜஸ்தானில், ஒடிசாவில், மகாராஷ்டிராவில் கட்சியின் தேசிய தலைமையின் உத்தரவுகளை கச்சிதமாகச் செய்து முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய அதிமுக்கிய பதவிகளையும் காரணங்களாகக் காட்டி, வேலை செய்யத் தூண்டியிருக்கிறார்கள்.

பர்வேஷ் வர்மா – கெஜ்ரிவால்

அதனால்தான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பம்பரமாய் சுழன்று வேலை பார்த்தார்கள் பாஜக-வின் டெல்லி நிர்வாகிகளும், தொண்டர்களும். ஒவ்வொரு டெல்லி வாசிகளின் வீட்டையும் ஒரு முறையாவது தட்டி வாக்கு சேகரிக்க வேண்டும். கட்சிப் பாகுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரிடமும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைமை கட்டாய உத்தரவாகப் பிறப்பித்ததால், போட்டி கடுமையாக இருக்கக்கூடிய பல தொகுதிகளில் இரண்டு தெருக்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற வீதம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, வேலைகள் மும்முரமாக நடந்தன.

மோடி

பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள்… அவ்வளவு ஏன் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தேசிய தலைமை தலைமை இறக்கி இருந்தாலும், எந்த ஒரு இடத்திலும் சிறு பிரச்னைக்கூட ஏற்படாமல் பிரசாரங்களைக் கச்சிதமாக நடத்திக்காட்டி இருக்கிறார்கள். பிரதமரது தேர்தல் பொதுக்கூட்டம் தொடங்கி தெருமுனைக் கூட்டம் வரை சிறு பிசிரு இல்லாமல் ஒருங்கிணைத்துச் செய்து காட்டி இருக்கிறார்கள். இதில் பாஜக டெல்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவின் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. அதனால்தான் தேர்தலில் கூட போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டுமே முன் நின்று நடத்தி இருக்கிறார்.

வீரேந்திர சச்தேவ்

தமிழ்நாட்டில் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்றுத் தந்ததற்காகவே இரண்டு முறை மத்திய இணை அமைச்சராக எல்.முருகனை நியமித்து அழகு பார்த்த பாஜக தலைமை, டெல்லி மாநில நிர்வாகிகள் பலருக்கும் உரிய அங்கீகாரத்தைத் தேர்தல் வெற்றிக்கான பரிசாக வழங்க உள்ளது என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನಕಲಿ ಔಷಧಿ ಜಾಲ ತಡೆಗಟ್ಟಲು ಕ್ರಮ -ಸಚಿವ  ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್

  ಬೆಂಗಳೂರು, ಮಾರ್ಚ್ 13,2025:  ರಾಜ್ಯದಲ್ಲಿ ನಕಲಿ ಔಷಧ ಮಾರಾಟ ಜಾಲವನ್ನು...

വാഹനാപകടത്തില്‍ വ്‌ളോഗര്‍ ജുനൈദ് മരിച്ചു

മലപ്പുറം: തൃക്കലങ്ങോട് മരത്താണിയില്‍ ബൈക്ക് മറിഞ്ഞ് വ്‌ളോഗര്‍ ജുനൈദ് (32)മരിച്ചു. റോഡരികിലെ...

'Senthil Balaji-க்கு, இனி ஒவ்வொரு நிமிடமும் ஷாக்தான்' – நெருக்கும் ED | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு...

Top Headlines @9PM : టాప్‌ న్యూస్‌

పవన్ అన్న అంటూ లోకేష్ ట్వీట్.. మంత్రి స్పెషల్ విషెస్ జనసేన 12వ...