9
Sunday
March, 2025

A News 365Times Venture

“அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்..'' – ட்ரம்ப் எச்சரிக்கை

Date:

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை அமல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழுவினர் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அமெரிக்கா சோமாலியாவில் வான்வழி தாக்குதலை துவங்கி இருக்கிறது. `அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்’ என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

வான்வழி தாக்குதல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “குகைகளில் பதுங்கியிருந்த கொலையாளிகள் அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறேன். எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், பல பயங்கரவாதிகள் மற்றும் குகைகளை அழித்துள்ளோம்.

எங்கள் இராணுவம் பல ஆண்டுகளாக இந்த ISIS தாக்குதல் திட்டமிடுபவரை குறி வைத்து வருகிறது, ஆனால் பைடனும் அவரது கூட்டாளிகளும் இந்த வேலையை அவர்களைச் செய்யவிடவில்லை. தற்போது நான் அதற்கு அனுமதித்து இருக்கிறேன். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ವಿದೇಶಿ ಮಹಿಳೆ  ಸೇರಿ ಇಬ್ಬರ ಮೇಲೆ ಅತ್ಯಾಚಾರ: ಇಬ್ಬರು ಆರೋಪಿಗಳ ಬಂಧನ- ಗೃಹ ಸಚಿವ ಡಾ.ಜಿ.ಪರಮೇಶ್ವರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,9,2025 (www.justkannada.in): ಕೊಪ್ಪಳ ಬಳಿ ವಿದೇಶ ಮಹಿಳೆ ಸೇರಿ ಇಬ್ಬರ...

മൂന്നാമതും പ്രസവിക്കുന്ന സ്ത്രീക്ക് സമ്മാനം നല്‍കുമെന്ന് ടി.ഡി.പി എം.പി; ആണ്‍കുട്ടിക്ക് പശു, പെണ്‍കുട്ടിക്ക് അമ്പതിനായിരം രൂപ

അമരാവതി: മൂന്നാമതും പ്രസവിക്കുന്ന സ്ത്രീക്ക് പാരിതോഷികം നല്‍കുമെന്ന ടി.ഡി.പി എം.പി അപ്പലനായിഡുവിന്റെ...

“விஜய் கொள்கைகளை வரவேற்கிறோம். ஆனால்…" – துரை வைகோ சொல்வதென்ன?

மதுரையில் நடந்த மதிமுக நிர்வாகி குடும்ப விழாவில் கலந்துகொண்ட துரை வைகோ...

Turkey: టర్కీ మానవరహిత విమానం ప్రయోగాలు పూర్తి.. భారత్‌కి చిక్కులు..

Turkey: టర్కీ తన బైరెక్టర్ డ్రోన్లతో భారత్‌ని చికాకు పెడుతోంది. పాకిస్తాన్,...