பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இருந்த இடத்திலிருந்தே அரசு சேவைகளைப் பெரும் வகையில், வாட்ஸ்அப் கவர்னன்ஸ் (WhatsApp Governance) என்ற முறையில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு இன்று (ஜனவரி 30) தொடங்கியிருக்கிறது. பொதுச் சேவைகளை மக்கள் எளிதில் அணுகும் வகையில் விரிவுபடுத்துவதற்காக `மன மித்ரா (Mana Mitra)’ என்று பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மெட்டாவுடன் (Meta) மாநில அரசு ஒப்பந்தம் போட்டதைத் தொடர்ந்து, கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், மக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அரசு சேவைகளைப் பெற முடியும். முதல்கட்டமாக அறநிலையத்துறை, போக்குவரத்துக் கழகம், முதல்வர் நிவாரண நிதி, அண்ணா உணவகங்கள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட 161 அரசு சேவைகளை மக்கள் வாட்ஸ்அப்பிலேயே பெறலாம். வரும் காலங்களில் கூடுதல் துறைகள் இதில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Proud to announce the launch of Andhra Pradesh’s first-ever Digital Public Services Chatbot on WhatsApp, in collaboration with @Meta ! This initiative brings 161 services directly to 50 million citizens, from booking temple seva, to paying utility bills — all within a single… pic.twitter.com/PkrQ99f3YW
— Lokesh Nara (@naralokesh) January 30, 2025
இதற்கான, அதிகாரப்பூர்வ எண்ணாக `95523 00009′ என்ற எண்ணை அரசு அறிவித்திருக்கிறது. மக்களுக்குப் பயனுள்ள இந்தத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்திய மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், “இந்தத் திட்டம் நாயுடு 2.0 மாடல் அரசில் ஒரு மைல்கல்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb