20
Thursday
February, 2025

A News 365Times Venture

`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ – கேள்வி எழுப்பும் தொல்.திருமாவளவன்!

Date:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“சீமான் பரபரப்புக்காக ஏதோ பேசுகிறார். இது காலப் பொருத்தம் இல்லாதது… கருத்தியல் பொருத்தம் இல்லாதது… அரசியல் பொருத்தம் இல்லாதது. மாறாக, கவன ஈர்ப்புக்காக, பரபரப்புக்காக தன்னை நம்பி வரக்கூடிய இளைஞர்களின் உணர்ச்சிகளை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை நோக்கில் அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார். பெரியாருடைய வெங்காயம்தான் காங்கிரஸ் ஆட்சியை இந்த மண்ணிலே வீழ்த்தியது. அந்த வெங்காயம்தான்,50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. பெரியாருடைய அந்த வெங்காயம்தான் இன்றைக்கும் சனாதர சக்திகளை தமிழ்நாட்டுக்குள்ளே நுழைய விடாமல் விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவரைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய அளவில் சமூக நீதியின் பால் நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான ஒரு தலைவர். அவரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த போக்கை அவர் கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது ஒரு விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்னை இல்லை. தமிழ்நாட்டில் எவ்வளவோ பேசப்பட வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன.

வக்ஃபு வாரியத்திற்குள்ளே தலையீடு செய்யக்கூடிய சட்ட மசோதாவை கொண்டு வந்திருக்கிற பா.ஜ.க அரசை பற்றி அவர் வாய் திறக்கவில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பா.ஜ.க அரசை பற்றி அவர் பேசவில்லை. ஆணவ கொலைகளைப் பற்றி பேசவில்லை. தலித் மக்களுக்கு எதிராக நிகழ்கிற படுகொலைகளை பற்றி பேசவில்லை. இப்படி, பேசப்பட வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றன.

தமிழின அரசியல் என்பது வேறு, தமிழ்நாட்டு அரசியல் என்பது வேறு. தமிழினம் என்பது விடுதலை தொடர்பான அரசியல். தமிழீழ விடுதலை அரசியலையும், தமிழ்நாட்டு உரிமை அரசியலையும் இணைத்து பேசுவது என்பது பொருத்தம் இல்லாதது. 24 மணி நேரமும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதை தாண்டி மக்கள் பிரச்னைகளை பற்றி அவர்கள் பேசுவதில்லை. தி.மு.க அரசுக்கு எதிராக பேசுவது மட்டும் தான் அரசியல் என்று கருதுகிறார். மதநல்லிணக்கம் இருப்பதால், பெரிய பதற்றம் எதுவும் இல்லை. ஆனால், உத்தரபிரதேசத்தில், பிற மாநிலங்களில் இடப்பதை போன்று கும்பல் கொலைகள் இல்லை. ஆணவக் கொலைகள் பெரிய அளவில் அங்கு தலைவிரித்தாடுவது போல் இங்கு இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என்று சொல்ல முடியாது.

பேட்டியளிக்கும் தொல்.திருமாவளவன்

ஆனால், ஒப்பீட்டளவிலேயே பிரமாண்டங்களை பார்க்கிற போது தமிழ்நாடு மிக சுமுகமான முறையிலே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல், வேங்கைவயலில் நடைபெற்ற இப்படிப்பட்ட ஒரு அநீதியை இங்கே யார் பேசுகிறார்கள்?. அண்ணாமலை இதைப்பற்றி என்ன சொல்ல போகிறார்?. இ.பி.எஸ் இதை கண்டிக்கவில்லை. இதே வேங்கைவயல் பிரச்னை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர், அதுவும் பிரதானமான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏன் கையில் எடுத்து போராடக் கூடாது?. ஆனால், அவர் ஏன் போராடவில்லை என்றால் அவர் அரசு எடுத்து நிலைப்பாடு சரி என்று ஒத்துக் கொள்கிறாரா என்று கேள்வி எழுகிறது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BREAKING NEWS : ರಾಜ್ಯ ಬಜೆಟ್ ಬಳಿಕ ಹಾಲಿನ ದರ ಲೀಟರ್ಗೆ 5 ರೂ. ಹೆಚ್ಚಳ..!

ಬೆಂಗಳೂರು, ಫೆ.೨೦, ೨೦೨೫ : ಮಾರ್ಚ್ ನಿಂದ ಚಹಾ, ಕಾಫಿ,...

ഫലസ്തീനികള്‍ക്കായി നിലകൊള്ളും; യു.എസ് സ്റ്റേറ്റ് സെക്രട്ടറിയോട് നിലപാട് ആവര്‍ത്തിച്ച് യു.എ.ഇ

അബുദാബി: ഫലസ്തീനികളെ നിര്‍ബന്ധിതമായി കുടിയിറക്കാനുള്ള തീരുമാനത്തെ ശക്തമായി എതിര്‍ക്കുമെന്ന് ആവര്‍ത്തിച്ച് യു.എ.ഇ...

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா...

Single Boy Story: “బాబు పెళ్లెప్పుడూ..” 30 ఏళ్లు దాటినా పెళ్లి అవ్వక మహేశ్ బాధలు వర్ణనాతీతం..

గతంలో అబ్బాయికి 21, అమ్మాయికి 18 వచ్చిందంటే పెళ్లిళ్లు జరిగేవి. ఇప్పుడు...