15
Saturday
February, 2025

A News 365Times Venture

`நமது நாட்டின் பாரம்பர்ய அறிவை ஆங்கிலேயர் களவாடிச் சென்றனர்!' – ஆளுநர் ஆர்.என்.ரவி நெல்லையில் பேச்சு

Date:

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.

அதில் அவர், “நெல்லை மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாகப் போராடிய ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன் போன்ற வீரமிக்க சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கொண்ட புண்ணிய பூமி இது. வ.உ.சிதம்பரனார் தொடங்கிய சுதேசி கப்பல் இயக்கம் நாடு முழுவதற்கும் சுதந்திர போராட்டத்தை எதிரொலிக்கச் செய்தது.

ஆங்கிலேயர்களை எதிர்த்த இளம் வீரர் வாஞ்சிநாதன். இந்த மண்ணில் ஆங்கில ஆட்சியாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டார். மகாகவி பாரதி தனது பாடல்கள் மூலம் நாடு முழுவதும் சுதந்திர உணர்வை ஊட்டினார் . தற்போதைய இளைஞர்கள், நமது நாட்டின் வரலாற்றையும் அதன் பாரம்பர்யத்தையும் உணர வேண்டும். 2047-ல் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ஆனால், 2014-ல் 16-வது இடத்தில் இருந்தது. தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியிருக்கும். தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்களாகிய நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆராய்ச்சிகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அறிவு சார் சொத்துகளை உருவாக்குவதில் மாணவர்கள் புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும்.

சர்வதேச அளவில் அறிவுசார் சொத்துகளை உருவாக்குவதில் சீனா 46 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ளது. அமெரிக்கா 18 சதவிகித பங்களிப்பை அளித்து வருகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 22,000 அறிவுசார் சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் 0.5% ஆகும். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், சென்னை ஐ.ஐ.டி போன்ற மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. 2024-ம் ஆண்டில் மட்டும் 400 பொருள்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

மக்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நமது தொழில்நுட்ப வளர்ச்சி இருக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட ரோபோடிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு ஏற்ப நாம் தொழில்நுட்பத்தில் வளர வேண்டும்.

காலனி ஆதிக்கத்தால் நமது பாரம்பர்யத்தையும் தொழில் மேம்பாட்டையும் இழந்து விட்டோம். 1788-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து மெக்காலே தலைமையில் பேராசிரியர் குழு இந்தியாவிற்கு வந்து ஆய்வு செய்தது. இந்துக்களின் பாரம்பர்யம், அறிவு சார் சொத்து உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து சேகரித்து மொழிபெயர்ப்பு செய்ய ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி நமது பாரம்பர்ய அறிவுகள் அனைத்தையும் மொழிபெயர்த்து களவாடிச் சென்றுவிட்டனர்.

நமது பாரம்பர்யத்தையும் அடையாளத்தையும் ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. நாம் உலகம் முழுவதையும் பாதுகாக்கும் சிந்தனையைக் கொண்டிருக்கிறோம். உலகத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்பங்களை நாம் ஏற்றுக் கொண்டு வளர்ச்சியடைய வேண்டும். அப்போதுதான் உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் உலகத்தால் புறக்கணிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

கொரோனா காலத்தில், பிற நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து வியாபாரம் செய்தன. ஆனால் இந்தியா பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. பிறநாட்டு மக்களின் உயிரையும் காப்பாற்றியது. அதனால் மாணவ சமூகம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்ப்பதில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Ranjith: "சாதியரீதியிலான வன்கொடுமைகளை அறிவீர்களா முதல்வரே?" – ஸ்டாலினிடம் பா.ரஞ்சித் கேள்வி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் மக்களின்...

Donald Trump : ట్రంప్, మస్క్ నిర్ణయం కారణంగా రోడ్డున పడ్డ 10వేల మంది

Donald Trump : అమెరికా అధ్యక్షుడు డొనాల్డ్ ట్రంప్, పారిశ్రామికవేత్త ఎలాన్...

ഇന്ത്യ വിരുദ്ധ ശക്തികളുടെ ഭാഗം; കത്തോലിക്ക സഭക്ക് കീഴിലെ സന്നദ്ധ സംഘടന കാരിത്താസിനെതിരെ ബി.ജെ.പി

ന്യൂദല്‍ഹി: കത്തോലിക്ക സഭക്ക് കീഴിലെ സന്നദ്ധ സംഘടനയായ കാരിത്താസിനെതിരെ ഗുരുതര ആരോപണങ്ങളുമായി...