14
Friday
March, 2025

A News 365Times Venture

"ஆர்.பி.உதயகுமார் எப்போதும் காமெடி செய்து கொண்டே இருப்பார்" – டி.டி.வி.தினகரன் கிண்டல்

Date:

தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.ம.மு.க தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

டிடிவி தினகரன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், அமைச்சர்கள் என அனைவரும் தலையிட்டு சுமுகமான தீர்வைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் சகோதர நோக்கத்துடன் பழகும் இந்து முஸ்லீம்களிடம் பிரச்னைகளை தி.மு.க அரசுதான் ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியாரைப் பற்றிப் பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது. தங்களுடைய சுய விளம்பரத்திற்காக ஒரு சிலர் அவரைப் பற்றி அவதூறுகளாகப் பேசி வருகிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்று எடப்பாடி செயல்படுகிறார் என்று ஆர்.பி. உதயகுமார் எப்போதும் காமெடி செய்து கொண்டே இருப்பார். இந்த உலகத்தில் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிகராக யாருமே கிடையாது. ஆர்.பி. உதயகுமார் பேசுவதை நாம் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இதனையடுத்து அத்திக்கடவு நிகழ்ச்சியைச் செங்கோட்டையன் புறக்கணித்தது பற்றிக் கேட்டதற்கு, “அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இந்த விஷயத்தில் செங்கோட்டையன் அவர்கள் எடுத்திருப்பது அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும்” என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನಕಲಿ ಔಷಧಿ ಜಾಲ ತಡೆಗಟ್ಟಲು ಕ್ರಮ -ಸಚಿವ  ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್

  ಬೆಂಗಳೂರು, ಮಾರ್ಚ್ 13,2025:  ರಾಜ್ಯದಲ್ಲಿ ನಕಲಿ ಔಷಧ ಮಾರಾಟ ಜಾಲವನ್ನು...

വാഹനാപകടത്തില്‍ വ്‌ളോഗര്‍ ജുനൈദ് മരിച്ചു

മലപ്പുറം: തൃക്കലങ്ങോട് മരത്താണിയില്‍ ബൈക്ക് മറിഞ്ഞ് വ്‌ളോഗര്‍ ജുനൈദ് (32)മരിച്ചു. റോഡരികിലെ...

'Senthil Balaji-க்கு, இனி ஒவ்வொரு நிமிடமும் ஷாக்தான்' – நெருக்கும் ED | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு...

Top Headlines @9PM : టాప్‌ న్యూస్‌

పవన్ అన్న అంటూ లోకేష్ ట్వీట్.. మంత్రి స్పెషల్ విషెస్ జనసేన 12వ...