17
Monday
March, 2025

A News 365Times Venture

Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" – ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்லுபடியாகுமா?

Date:

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளைச் செய்து வருகிறார். அதில் ஒன்று மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது. கடந்த மாதமே செய்தியாளர் சந்திப்பில், “மிக விரைவில், ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம். அது எங்களுடையது. அமெரிக்காவின் வளைகுடா… என்ன அழகான பெயர். இதுதான் சரியாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

Trump | ட்ரம்ப்

இந்த நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா எனப் பெயரை மாற்றம் செய்யும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 30 நாட்களுக்குள் பெயர் மாற்றத்தை முறைப்படுத்துமாறும் அமெரிக்க உள்துறைச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கரீபியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பெருங்கடல் படுகைதான் மெக்சிகோ வளைகுடா. சுமார் 16 முதல் 20 லட்சம் சதுர கி.மீ கடல் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில், மெக்சிகோவின் தமௌலிபாஸ், வெராக்ரூஸ், தபாஸ்கோ, காம்பேச், யுகடன் ஆகிய ஐந்து மாகாணங்களின் கடற்கரைகளும், அமெரிக்க மாகாணங்களான ஃப்ளோரிடா, அலபாமா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ் மற்றும் கியூபாவின் பினார் டெல் ரியோ, ஆர்டெமிசா ஆகிய மாகாணங்களின் கடற்கரைகளும் உள்ளன.

மெக்சிகோ வளைகுடா

உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் மெக்சிகோ வளைகுடாவும் ஒன்று. அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 14 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 5 சதவீதமும் இந்த வளைகுடாவிலிருந்தே கிடைக்கிறது. மெக்சிகோவுக்கும் இந்த வளைகுடா மிகவும் முக்கியமானது, ஏனெனில் மெக்சிகோவுக்கு இங்கிருந்து கிடைக்கும் எண்ணெய் அதன் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வளைகுடா மறுபெயரிட சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலவியல் பெயர்கள் நிபுணர்கள் குழு (UNGEGN) உள்படப் பல சர்வதேச அமைப்புகளின் மதிப்பீடும், ஒப்புதலும் தேவை. ஒருவேளை புதிய பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மெக்சிகோ, கியூபா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் புதிய பெயரைச் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் வகையில் தங்கள் அதிகாரப்பூர்வ வரைபடங்களையும் சட்டங்களையும் புதுப்பிக்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

CM Chandrababu : ఈ నెల 18న ఢిల్లీకి సీఎం చంద్రబాబు

CM Chandrababu : ఏపీ ముఖ్యమంత్రి చంద్రబాబు నాయుడు (AP CM...

ಗೋಲ್ಡ್ ಸ್ಮಗ್ಲಿಂಗ್ ಕೇಸ್:ಜಾಮೀನು ಕೋರಿ ಸೆಷನ್ಸ್ ಕೋರ್ಟ್ ಮೆಟ್ಟಿಲೇರಿದ ನಟಿ ರನ್ಯಾರಾವ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,15,2025 (www.justkannada.in):   ಚಿನ್ನಕಳ್ಳ ಸಾಗಾಣೆ ಪ್ರಕರಣದಲ್ಲಿ ಬಂಧಿತರಾಗಿ ನ್ಯಾಯಾಂಗ ಬಂಧನದಲ್ಲಿರುವ...

കേരളത്തില്‍ ഒറ്റപ്പെട്ടയിടങ്ങളില്‍ ഇടിമിന്നലോടുകൂടിയ മഴയ്ക്ക് സാധ്യത

തിരുവനന്തപുരം: സംസ്ഥാനത്ത് ഒറ്റപ്പെട്ടയിടങ്ങളില്‍ ഇന്നും നാളെയും 16.03.25, 17.03.25 തിയതികളില്‍ ഇടിമിന്നലോടു...

`புத்தாண்டு, ஹோலி…' அடிக்கடி வியட்நாம் செல்லும் ராகுல் காந்தி; காரணம் கேட்கும் பாஜக

மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது தனிப்பட்ட பயணமாக வியட்நாம்...