14
Friday
March, 2025

A News 365Times Venture

“ஞானசேகரன் அலைபேசியில் யார் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை வெளியிடுவேன்" – அண்ணாமலை அதிரடி

Date:

மதுரை மாவட்டம், அ.வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜக, கொண்டு வராத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தது, மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தோம், டங்ஸ்டன் திட்டம் ரத்தானதன் வெற்றி மாலையை யாருக்கு வேண்டுமானாலும் போடலாம்.

அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் யார் யாருடன் பேசினார் என்பது குறித்த தகவல்கள் என்னிடம் உள்ளன. ஆதாரங்களை ஒரு நாள் வெளியிடப் போகிறேன். வழக்கின் போக்கை தெரிந்து கொண்டு ஆதாரங்களை வெளியிடுவேன். ஞானசேகரன், குற்றம் செய்த பின்பு யார் யாரிடம் பேசினார் என்கிற ஆதாரம் என்னிடம் உள்ளது.

எப்.ஐ.ஆர் லீக் செய்தது யார் என விசாரிக்கவில்லை,  செய்தியாளர்களின் செல்போனை பறிமுதல் செய்தது தவறு, சிறப்பு புலனாய்வுக் குழு முறையாக விசாரிக்கவில்லையென்றால், ஞானசேகரனின் செல்போன் தகவல்களை வெளியிடுவேன்.

செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும் அவர்களுக்கு பாஜக சட்ட உதவிகளைச் செய்யும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு திசை திருப்பப்படுகிறது.

அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்லாத முதலமைச்சர் அரிட்டாப்பட்டிக்கு வந்ததிலிருந்தே அவருடைய அரசியலை புரிந்து கொண்டேன். அவசர அவசரமாக பாராட்டு விழாவிற்கு வருவதற்கு வேகம் காட்டிய முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஏன் வேகம் காட்டவில்லை? ஞானசேகரன் திமுகவிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை.  தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் தமிழக காவல்துறை தலைவர் கொடுக்கக்கூடிய செய்தி குறிப்புகள் முற்றிலும் பொய்யாக உள்ளது.

இ.சி.ஆரில் நடந்த சம்பவத்தில் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, பெண்களையே குற்றவாளியாக்குகிறது, தமிழகத்தில் நடைபெறும் கேடுகெட்ட செயல்களுக்கு காவல்துறை துணை போகக்கூடாது என உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

இசிஆரிலுள்ள என் வீட்டில் கொடியேற்ற முயற்சித்தபோது காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்ததுபோல பெண்களை துரத்தும்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குற்ற செயல்களில் திமுக அரசு கூறிய பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்கிறது.

 செல்வப்பெருந்தகை கருப்புக்கொடி காட்டுவதால் அமித்ஷா பயந்து அகமதாபாத்துக்கு திரும்பிச் சென்று விடுவாரா? பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களை காவல்துறை பயமுறுத்துகிறது, வேங்கைவயல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செட்டப் செய்து ஆடியோவை வெளியிட்டு உள்ளனர். வேங்கை வயல் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தருகிறோம். இவ்வழக்கில் சாதி மோதல் வரக்கூடாது என்பதற்காக அதே சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேரை குற்றவாளி ஆக்கி உள்ளீர்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BREAKING NOW: ಮಸೀದಿ ವಿವಾದ , ನಾಳೆ ಬೆಳಗ್ಗೆ 11 ಗಂಟೆಗೆ ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿ ನೇತೃತ್ವದಲ್ಲಿ ಸಭೆ.

ಮೈಸೂರು, ಮಾ.13,2025: ಹೈಕೋರ್ಟ್ ನಿರ್ದೇಶನದ ಮೇರೆಗೆ ಕ್ಯಾತಮಾರನಹಳ್ಳಿಯ ಮಸೀದಿಗೆ ಬೀಗ...

തുഷാര്‍ ഗാന്ധിയെ തടഞ്ഞുവെച്ച സംഘപരിവാര്‍ പ്രവര്‍ത്തകരെ ആദരിച്ച് ബി.ജെ.പി

തിരുവനന്തപുരം: ആര്‍.എസ്.എസിനെ വിമര്‍ശിച്ചെന്ന് ആരോപിച്ച് മഹാത്മാഗാന്ധിയുടെ കൊച്ചുമകനും പ്രമുഖ ഗാന്ധിയനുമായ തുഷാര്‍...

`₹ குறியீடு கொண்ட கலைஞர் நினைவு நாணயங்களை வீசி எறிந்து விடுமா திமுக?' – அன்புமணி கேள்வி

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை...

Green Card: గ్రీన్ కార్డ్ ఉన్నంత మాత్రాన “శాశ్వత నివాసం” కాదు: యూఎస్ వైస్ ప్రెసిడెంట్..

Green Card: డొనాల్డ్ ట్రంప్ అమెరికా అధ్యక్షుడైన తర్వాత అక్రమ వలసదారులపై...